செய்திகள் :

`பைனான்ஸ்' வழக்கறிஞரிடம் கடன் கேட்ட ஆசாமி; 17 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து ஓட்டம் - நடந்தது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கையைச் சேர்ந்தவர் அகஸ்தீசன். வழக்கறிஞரான இவர், தனது சகோதரருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம், சிவா என்ற பெயரில் ஒருவர் அவருடன் அறிமுகமானார். அவர், தான் வெளிநாடுகளுக்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாகவும், தூத்துக்குடி துறைமுகம் அருகில் தனக்கு குடோன் இருப்பதாகவும் கூறியுள்ளார். தனது தொழிலை விரிவுபடுத்த ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுவதாகவும் அகஸ்தீசனிடம் கேட்டுள்ளார்.

theft
theft

கடன் கொடுப்பது தொடர்பாக நேரில் பேசவும், குடோனை பார்வையிடவும் அகஸ்தீசன் கடந்த 10-ம் தேதி நெல்லைக்கு வந்துள்ளார்.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதே விடுதியின் மற்றொரு அறையில், கடன் கேட்ட சிவாவும், அவரது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன் தங்கியுள்ளார்.

இரவு சுமார் 9 மணியளவில் சிவா வாங்கி வந்த உணவை அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றனர். அகஸ்தீசன் தனது அறையின் கதவை பூட்டாமல் மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்கியதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அகஸ்தீசன் கண் விழித்துப் பார்த்தபோது எதிர் அறையில் தங்கியிருந்த சிவா மற்றும் அவரது மனைவி, குழந்தையை காணவில்லை.

இதனால், சந்தேகமடைந்து தனது அறையை சோதனையிட்ட போது மேஜையில் வைத்திருந்த 2 சவரன் தங்க செயின், ஒன்னேமுக்கால் சவரன் தங்க மோதிரம் மற்றும் தனது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 13 சவரன் தங்கச்சங்கிலி என சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகைகளை காணவில்லை.

வெளியே வந்து பார்த்தபோது சிவா வந்த காரையும் காணவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அகஸ்தீசன் புகார் அளித்தார்.

theft
theft

அப்புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகைகளை திருடிச் சென்றவர் ஹரிஹரன் என்பவர், சிவா என்ற பெயரில் அகஸ்தீசனுக்கு அறிமுகமாகி ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாக பொய்யான தகவலைக்கூறி அவரையும், அவரது மனைவியையும் நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், அகஸ்தீசன் மனைவியுடன் அசந்து தூங்கிக் கொண்டிருக்கையில் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிஹரனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து நகைகளை மீட்டு அகஸ்தீசனிடம் ஒப்படைத்தனர்.  

மர்ம மரணம்: மனைவியுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்; தீவிர விசாரணையில் காவல்துறை!

'தி பிரின்சஸ் பிரைட்', 'திஸ் இஸ் ஸ்பைனல் டேப்', 'வென் ஹாரி மெட் சாலி', 'மிசரி' மற்றும் 'எ ஃபியூ குட் மென்' போன்ற பல கிளாசிக் படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர். இவரும், இவர்... மேலும் பார்க்க

111 போலி நிறுவனங்கள், ரூ.1000 கோடி மோசடி; வெளிநாட்டில் இருந்து இயக்கிய சைபர் கும்பல் - CBI அதிர்ச்சி

நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆன்லைன் போலி பங்குவர்த்தகம், வேலை வாய்ப்பு, எம்.எல்.எம் என பல்வேறு வழிகளில் இணையத்தள மோசடிகள் நடந்து வருகிறது. இதில் பொத... மேலும் பார்க்க

Sydney: யூத நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் பான்டி (Bondi) கடற்கரையில் இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளு... மேலும் பார்க்க

ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?

தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வன... மேலும் பார்க்க