செய்திகள் :

"போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

post image

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போராட்டத்திற்கான அனுமதி கோரி குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஆனால் சிஜேபி அமைப்பு தாமதமாக விண்ணப்பித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

CJP
CJP

இதனைத்தொடர்ந்து டெல்லியின் முக்கியமான பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதில் சிஜேபி அமைப்பினர் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் 7 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியின் மத்தியப் பகுதியில் செல்போன் இணைய சேவையை 24 மணி நேரத்திற்கு முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக 12 தடுப்புக் காவல் மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர்.

போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

CJP Protest
CJP Protest

அப்பதிவில், " நமது போராட்டம் தொடங்குவதற்கு முன்பே மோடி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார். போராட்டக்காரர்கள் மீதான தீவிரமான ஒடுக்குமுறையும், டெல்லி முடக்கமும் பலத்தின் அடையாளங்கள் அல்ல, மாறாகத் தன் சொந்த மக்களுக்கே அஞ்சி நடுங்கும் ஒரு தலைவரின் பயத்தையே காட்டுகின்றன" என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத... மேலும் பார்க்க

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம... மேலும் பார்க்க

அபிஜித் விமானத்தில் கைது; 30,000 போலீஸ் குவிப்பு; 250 ரயில்கள் ரத்து; என்ன நடக்கிறது டெல்லியில்?

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று அழைக்கப்படும் எஸ்.ஐ.ஆர். திட்டத்தில் மோசடி செய்ததாகக் கூறி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங... மேலும் பார்க்க

"விமானியாக வேண்டும்" கனவுக்குப் பின்னால் 9/11? - Flydubai துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்!

விமானியாக வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அந்த விமானத்தையே தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக flydubai துணை விமானி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுவும் 2001-ம் ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய 9/11... மேலும் பார்க்க

’தவெக-விற்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது’ – நயினார் நாகேந்திரன் கணிப்பு!

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்ச... மேலும் பார்க்க

CJP: ``டம்மி முதல்வர் யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்" - உதயநிதி ஸ்டாலின்

சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை குண்டுக்கட்டாக காவல்துறை கைது செய்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற... மேலும் பார்க்க