செய்திகள் :

மத்​தியப் பிரதேச படகு விபத்து: மகனை அணைத்தபடி உயிரிழந்த தாய்; வைரல் படத்தின் உண்மை பின்னணி என்ன?

post image

மத்​தியப் பிரதேச மாநிலம் ஜபல்​பூர் மாவட்​டத்​தி​லுள்ள பார்கி அணை​யில் 3 நாட்​களுக்கு முன்பு படகில் சுற்​றுலா சென்றபோது திடீரென்று படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், தமிழகத்​தைச் சேர்ந்த 5 பேர் உட்பட சுற்​றுலாப் பயணி​கள் 9 பேர் உயி​ரிழந்​திருந்தனர்.

படகு விபத்து
படகு விபத்து

28 பேர் மீட்​கப்​பட்​டிருந்தனர். இந்த விபத்து தொடர்பான நிறைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

அந்த வகையில் விபத்தின்போது ஒரு தாய் தனது மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரைக் கண்கலங்க செய்திருந்தது.

ஆனால் இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் அந்த வைரல் புகைப்படம் உண்மையானது அல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்

ஜபல்பூர் காவல்துறை அதிகாரிகளும் வைரலான அந்தப் படத்திற்கும் விபத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதியாக மறுத்துள்ளனர்.

படகு விபத்தில் மகனை மார்போடு அணைத்தபடி உயிரிழந்த தாய் என்று பகிரப்பட்ட படம் AI புகைப்படம் என்று தெரியவந்திருக்கிறது.

``என் கணவர் உனக்கு; உன் கணவர் எனக்கு...!" - நீதிபதிகளை தலைச்சுற்ற வைத்த சகோதரிகள் - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், ததியா பகுதியைச் சேர்ந்த கிரிஜா சங்கர், `மாயாராம் என்பவர் தனது மனைவியையும் மகளையும் கடத்திச் சென்று சட்டவிரோதமாகப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளார்' என குவாலியார் உயர் நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

முதலிரவில் முகத்திரையை எடுக்க ரூ.90 லட்சம்: பெண் வீட்டார் மீது `கொலை முயற்சி' வழக்கு - என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முஸ்கான் சிங். இவருக்கும் கல்பனா என்றப் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று கல்பனா தன் முகத் திரையை அகற்ற ரூ.90 லட்சம் கொ... மேலும் பார்க்க

நேரலையில் சிக்கிய 'செல்போன்' சர்ச்சை: ராஜஸ்தான் ராயல்ஸ் மேலாளர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை?

ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர், போட்டியின்போ... மேலும் பார்க்க

நர்மதா நதிக்கு 11,000 லிட்டர் பால் அபிஷேகம்; வைரலான வீடியோ... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்வதென்ன?

நர்மதா நதியில் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொட்டப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது ஒருபுறம் மத நம்பிக்கை குறித்த விவாதத்தையும், மறுபுறம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அக்கறை குறி... மேலும் பார்க்க

Trisha: ``தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன்..." - பதிலடி பதிவு

சமீபகாலமாக தொடர்ந்து நடிகை த்ரிஷா தொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டதில் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்களின் விமர்சனங்கள் வரை நடந்தது. இந்த நில... மேலும் பார்க்க