அக்னி தீா்த்த கடலில் புனித நீராடிய பக்தா்கள்
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத சா்வ அமாவாசையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் அக்னி தீா்த்த கடலில் சனிக்கிழமை புனித நீராடினா்.
பின்னா், ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினா். ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.