செய்திகள் :

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (நண்டு) வறுவல்! - வீட்டிலேயே செய்வது எப்படி?

post image

கத்திரிக்காய் (நண்டு) வறுவல்

தேவையானவை:

பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ

சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - 5 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்)

பூண்டு - 4 பற்கள்

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகத்தூள் - 2 டீஸ்பூன்

சோம்புத்தூள் - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

கத்திரிக்காய் (நண்டு) வறுவல்

செய்முறை:

கத்திரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றைத் தாளிக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடவும். அடுப்பைக் குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கலவையைக் கொதிக்கவிடவும்.பிறகு இதனுடன் மிளகுத் தூள், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தைக் குறைக்க கத்திரிக்காய் உதவும்.

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: மீல்மேக்கர் (மட்டன்) குழம்பு! - வீட்டிலேயே செய்வது எப்படி?

மீல்மேக்கர் (மட்டன்) குழம்புதேவையானவை: மீல்மேக்கர் – ஒரு கப் பெரிய வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்) நறுக்கிய தக்காளி – ஒன்று கறிவேப்பிலை – சிறிதளவு மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் – ஒரு டேபிள... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: சீராளன் கறிக்குழம்பு - வீட்டிலேயே செய்வது எப்படி?

சீராளன் கறிக்குழம்புதேவையானவை: தட்டைப்பயிறு (காராமணி) - 100 கிராம் பாசிப்பயிறு (பச்சைப்பயிறு) - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் சின்ன வெங்காயம் - 10 (நறுக்கிக்கொள்ளவும்) தக்காளி - 2 (நறுக்கிக்கொள... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: பலாக்காய் (கோழி) வறுவல் - வீட்டிலேயே செய்வது எப்படி?

பலாக்காய் (கோழி) வறுவல்தேவையானவை: சிறிய பிஞ்சு பலாக்காய் - ஒன்று சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய தக்காளி - ஒன்று காய்ந்த மிளகாய் - 5 (இரண்டாகக் கீறவும்) பூண்டு - 5 பற்கள் (நசுக்கவும... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (கோழி) குழம்பு! - வீட்டிலேயே செய்வது எப்படி?

கத்திரிக்காய் (கோழி) குழம்புதேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (இரண்டாக நறுக்கவும்) நசுக்கிய பூண்ட... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: சேனை (மீன்) வறுவல்! - வீட்டிலேயே செய்வது எப்படி?

சேனை (மீன்) வறுவல்தேவையானவை: சேனைக்கிழங்கு – அரை கிலோ கடலை மாவு - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் எலுமிச்சை – ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) எண்ணெய்... மேலும் பார்க்க

அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: வாழைப்பூ (அயிரை மீன்) குழம்பு! - வீட்டிலேயே செய்வது எப்படி?

வாழைப்பூ (அயிரை மீன்) குழம்புதேவையானவை: நரம்பு நீக்காத வாழைப்பூ - ஒரு கப் சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்) தக்காளி - 2 (நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (காம்பு பக்கம் கீறவும்) கறிவேப்பிலை – சிறிதளவு மி... மேலும் பார்க்க