விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்க...
அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: வாழைக்காய் (கருவாட்டு) பொரியல் - வீட்டிலேயே செய்வது எப்படி?
வாழைக்காய் (கருவாட்டு) பொரியல்
தேவையானவை:
வாழைக்காய் - 2 (தோலை நீக்கி விரல் போன்று நறுக்கவும்)
பூண்டு - 3 பற்கள் (நசுக்கவும்)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வாழைக்காய் மற்றும் உப்பு ஆகியவற்றை இதனுடன் சேர்த்து அடிக்கடி கிளறி எண்ணெயில் வேகவிடவும். காய் முக்கால் பதத்துக்கு வெந்தவுடன் மிளகாய்த்தூள் மற்றும் நசுக்கிய பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கிளறவும். வாழைக்காய் மொறுமொறுப்பாக வந்தவுடன் இறக்கவும்.
இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளூகோஸின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை வாழைக்காய்க்கு உண்டு.















