விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்க...
அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: பலாக்காய் (கோழி) வறுவல் - வீட்டிலேயே செய்வது எப்படி?
பலாக்காய் (கோழி) வறுவல்
தேவையானவை:
சிறிய பிஞ்சு பலாக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - 5 (இரண்டாகக் கீறவும்)
பூண்டு - 5 பற்கள் (நசுக்கவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை, இலை - தலா ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பலாக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி சோம்பு, பட்டை, இலையைத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கூடவே அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கிளறவும்.
பிறகு அடுப்பைக் குறைவான தீயில் வைத்து எண்ணெய் மிதந்து வரும்வரை கலவையைக் கொதிக்கவிடவும். பின்னர் இதில் வேகவைத்த பலாக்காயைச் சேர்த்து நன்கு கிளறி வாணலியை மூடிவைத்து ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.
பலாக்கொட்டையில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, ஏ, பி, சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன.















