Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி... தவறவி...
அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: சேனை (மீன்) வறுவல்! - வீட்டிலேயே செய்வது எப்படி?
சேனை (மீன்) வறுவல்
தேவையானவை:
சேனைக்கிழங்கு – அரை கிலோ
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை – ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்)
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
சேனைக்கிழங்கைத் தோல் நீக்கி மீன் துண்டுகள் போல் நீள் சதுரமாக நறுக்கவும். இதை நன்றாகக் கழுவி நீரின்றி வடித்து எடுத்துக்கொள்ளவும். (இப்படிச் செய்வதால் சேனையின் அரிப்புத்தன்மை குறையும்.)
பின்னர் இதனுடன் தேவையான உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு எலுமிச்சைச்சாறு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசிறி அரை மணி நேரம் ஊறவைத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கொங்கு நாட்டுத் திருமண விருந்தில் சேனைக்கிழங்கு வறுவல் இடம்பெறுவது வழக்கம். இதை கட்லெட் என்றும் கூறுவதுண்டு.















