செய்திகள் :

'அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன்னு வாய்கிழிய பேசிய முதல்வர் எங்கே?' - உதயநிதி காட்டம்

post image

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலிருந்து பட்டப்பகலில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தச் சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டடிருக்கும் பதிவில், "சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

BB Tamil: 'அந்த ஒருவரை ஜெயிக்க விடாதீங்க!' - வெளியேறும்போது அவினாஷை பார்த்து ஆவேசமான லட்சுமி பிரியா

'மகாநதி' நாடகம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லட்சுமி பிரியா. தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுவது போன்ற ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை எம்.பி அண்ணாதுரையிடம் அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை... அதிர்ச்சியில் திமுக-வினர்

திருவண்ணாமலை எம்.பி-யும் தி.மு.க இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் இன்று காலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

``இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்று' என பேசிவதா? TVK அங்கீகாரம் Suspend?' - அதிமுக மூவ்

மதுராந்தகத்தில் சில தினங்களுக்கு முன்பு பிரச்சாரம் செய்தபோது தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இரட்டை இலையும், விசில் சின்னமும் ஒன்றுதான் என்று பேசியிருந்தார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' - சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!

பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியிருக்கும் ஜெம் வீரமணி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தவெக அமைச்சர்கள் லோகேஸ் தனபாலும், வெங்கட்ரமணனும் அவருடன் மேடையில் இருப்பதைப் போல ஒரு வீடியோ இணையத்த... மேலும் பார்க்க

மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது?

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய் வருகை தர இருக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரை ராஜாஜி மருத்துவமனை ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! - யார் அவர்கள்?

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு பு... மேலும் பார்க்க