செய்திகள் :

‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ - காங்கிரஸ்

post image

"பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது" எனச் சாடியிருக்கிறார் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீ தி லீடர்ஸ் என அமைப்பை நடத்தி, அமித் ஷாவால் கொடுக்கப்பட்ட அசைன்மண்டை நல்லபிள்ளையாக செய்து காட்ட வேண்டும் என துடிக்கும் தம்பி அண்ணாமலை எதையும் ஆராய்ந்து தெளிவாக பேச வேண்டும். காங்கிரஸ் எப்போது போராட வேண்டும், எப்படி போராட வேண்டும் என விமர்சிக்கும் அளவு நீங்கள் இன்னும் வளரவில்லை. அதற்கான போதிய அறிவோ அல்லது ஆராய்ச்சியோ கூட தங்களிடம் இல்லை என்பது உங்கள் பேச்சிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

ஜனநாயகத்தை பற்றியும், அரசியலமைப்பை பற்றியும், சமூகநீதியை பற்றியும் கொஞ்சமும் அறியாத பா.ஜ.க-வின் பாசறையில் உருவாக்கப்பட்ட அண்ணாமலை மோடியிடம் உங்கள் விசுவாசத்தை காட்டுவதற்காக, தேசம் காக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உங்களது முட்டாள்தனமான கருத்துகளுக்கான விளைவுகள் மோசமானதாக இருக்கும். உங்கள் இரட்டை நாக்கின் விஷம வார்த்தைகளை அமித்ஷா, மோடி, பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது என்பது காங்கிரஸ் நடத்தும் எஸ்.ஐ.ஆர் போராட்டம் குறித்த உங்கள் கோமாளித்தனமான கேள்வியில் இருந்து புரிகிறது. 

எஸ்.ஐ.ஆர்-ல் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் முரண்பட்ட கருத்து குறித்த செய்திகள் வெளிவந்ததே தேர்தலுக்கு பின்தான். இதை தெரிந்துதான் அப்படி பேசினீர்களா அண்ணாமலை? இதுதான் உங்கள் தராசு தட்டா? அதனால்தான் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வழியில் காங்கிரஸ் கட்சி தேசம் காக்க போராடி வருகிறது. எஸ்.ஐ.ஆர் அவசரமாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா கூட்டணி அதை கடுமையாக எதிர்த்து வரும் நாடறிந்த செய்தி. அறிவுஜீவி அண்ணாமலைக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யம் தான். 

அண்ணாமலை
அண்ணாமலை

ஒருவேளை அப்போதெல்லாம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களோ? பயங்கர அறிவாளியான உங்கள் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவே சற்று பயமாக தான் இருக்கிறது.  ஆனால் என்ன செய்வது நானும் ரௌடிதான் நானும் ரௌடிதானு வடிவேலு வண்டியில் ஏறுவதுபோல் ஏறியதால் உங்களுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதை எண்ணி சற்று வருத்தத்ததுடன் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

"பெண்களே, சிறுமிகளே... உதவி செய்வதாக தவெகவினர் வந்தால் காவல்துறையை அணுகுங்கள்!"- எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.“கன்னிய... மேலும் பார்க்க

"வனவிலங்குகள், தெருநாய்கள், பூனைகளை பிடித்து ஆய்வக சோதனைகள்.!"- மத்திய அரசுக்கு தயாநிதி மாறன் கடிதம்

மத்திய அரசு புதிய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை அறிமுகப்ப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் மத்திய அமைச்சர் ராஜீவ... மேலும் பார்க்க

ஒன்றிய - மாநில உறவு குறித்து திமுக அரசு அமைத்த கமிட்டி; கிடப்பில் போடும் தவெக அரசு? - பின்னணி என்ன?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்த சிக்கல்களை ஆராய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கமிட்டியை தவெக அரசு கிடப்பில் போடுவதாகவும், கமிட்டிய... மேலும் பார்க்க

"வாக்களித்த பெண்களுக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?"- கனிமொழி காட்டம்

சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை வெட்டிக் கொன்று இரண்டு பெண் குழந்தைகளை கடத்திய சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த முத... மேலும் பார்க்க

`விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா என்பதை..!' - மரியவில்சன் சொல்வதென்ன?

நிதியமைச்சர் மரியவில்சன் இன்று (அக்.23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "தனுஷ் அரசி... மேலும் பார்க்க

`செங்கோட்டையன் அழுத்தத்தால்தான் இந்தக் கைது நடவடிக்கை நடந்துச்சு..!' - நாதக கார்த்திகா பேட்டி

தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டி... மேலும் பார்க்க