செய்திகள் :

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" - மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

post image

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் ஒன்றையும் அளித்திருந்தார்.

"பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?" ஆதங்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வைரல் வீடியோவுக்குச் சம்பந்தப்பட்ட மலேசிய பெண் இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வீடியோவைப் பார்த்து அமைச்சர் இப்படி ஒரு டிரஸ் போடலாமா? என்று கேட்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் இருக்கும் நபர் நான்தான். அமைச்சர் கிடையாது. அந்த வீடியோவிற்குக் கீழ் அநாகரிகமாக கமென்ட்ஸ் பண்ணவர்களாக இருக்கட்டும், ட்ரோல் பண்ணவர்களாக இருக்கட்டும் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.

அதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன். இந்த வீடியோ வைரலாகி என்ன ஆகப்போகிறதோ என்று பயமாக இருந்தது.

சம்பந்தப்பட்ட மலேசிய பெண் விளக்கம்
சம்பந்தப்பட்ட மலேசிய பெண் விளக்கம்

ஆனால் என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. நான் நாகரிகமாக டிரஸ் அணியவில்லை என்று கமென்ட் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன நாகரிகமற்று நான் டிரஸ் அணிந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

போலிஸிடம் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறேன். இந்தியாவில்தான் அந்த வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு இருக்கிறது. இப்போது வரை பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க