செய்திகள் :

"அந்தச் சமயத்தில் சுவேந்து அதிகாரிதான் ஆறுதல் சொன்னார்" - TMC மஹுவா மொய்த்ரா

post image

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தனியார் ஊடகத்திற்குப் பேட்டிஅளித்திருக்கும் அவர், "தங்களின் அரசியல் பாதைகள் வேறுபட்டிருந்தாலும், தனிப்பட்ட முறையில், சுவேந்து அதிகாரியுடன் எனக்கு மிகவும் நல்ல நட்பு இருந்துள்ளது.

நாங்கள் இருவரும் திரிணாமுல் காங்கிரஸில் ஒன்றாக இருந்தபோது, ​​அவர் எனக்கு மிகவும் ஆதரவளித்தார்.

குறிப்பாக, 2014-இல் எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அது கிடைக்கவில்லை.

நான் இரவு முழுவதும் அழுதேன். அப்போது, ​​சுவேந்து எனக்கு ஆறுதல் கூறினார். அதேபோல், நான் முதன்முதலில் கரீம்பூரில் போட்டியிட்டபோது, ​​எனக்காகப் பிரசாரம் செய்ய யாரும் வரவில்லை.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

ஆனால் எனது முதல் பேரணியை சுவேந்து அதிகாரிதான் நடத்தினார். இருப்பினும் சுவேந்து இன்று வேறு கட்சிக்குச் சென்றுவிட்டார். அதனால், நாங்கள் இப்போது பேசிக்கொள்வதில்லை. ஆனால், அவர் எனக்கு செய்த உதவியை என்னால் மறக்க முடியாது” என்று பேசியிருக்கிறார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க