செய்திகள் :

PMK: இணைந்த தந்தை - மகன் இதயங்கள்! - இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா‌.ம.க- வில் பதவி வழங்குவதில் தொடங்கி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா‌.ஜ.க ஆதரவு, சுயேச்சை நிலைப்பாடு வரை தந்தையும் மகனும் எதிரெதிர் துருவங்களில் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டுக்கிடந்த சூழலில் ராமதாஸ் அணிக்கு பக்கபலமாக நின்றவர் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அருள். ராமதாஸின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொண்டது மட்டுமில்லாமல், அன்புமணியை கடுமையாக எதிர்த்து பகையை சம்பாதித்தவர்.

தன்னை கட்சியை விட்டு நீக்கியபோதும், "என்னை நீக்க அன்புமணிக்கோ அவரது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கோ அதிகாரம் இல்லை" என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.

அன்புமணி ராமதாஸ் தரப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியது, மற்றும் தேர்தல் நேரத்தில் மாற்று அணியாகக் களம் கண்டது போன்ற தீவிரமாக ராமதாஸ் பக்கம் நின்ற இவருக்கு, இந்த இணைப்பு நெருக்கடியான சூழலை உருவாக்கியிருக்கிறது.

பா.ம.க அருள்

ராமதாஸ் அணி பக்கம் நின்ற பா.ம.க- வைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், " தந்தை மகனின் குடும்ப மற்றும் அரசியல் ரீதியான இந்த திடீர் இணைப்பால் இடையில் நின்று தீவிரமாகப் போராடிய அருள் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியிருக்கிறார்கள். மீண்டும் அன்புமணி தலைமையின் கீழ் தொடர்வது என்பது கடுமையான மன உளைச்சலையும் இக்கட்டான சூழலையும் உருவாக்கும். அரசியலில் மாற்றுப் பாதையைத் தேடும் கட்டாயப்படுத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அருள்" என்றார்.

இதனிடையே செய்தியாளர்களிடம், ``" தந்தை மகன் இருவரிடையே நீடித்த வந்த மோதல் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இனி இணைந்து செயல்படுவோம்" என அருள் கருத்து தெரிவித்திருக்கிறார்.

"அப்பாவை அங்க தேடாதீங்க; மகளிர் உரிமைத்தொகை இருக்கும்வரை நான்தான் முதல்வர்" - ஸ்டாலின் பதிலடி

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், "நாட்டில் மின்வெட்டுப் பிரச்னை, டெல்டா மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

தனியார்மயம்: `முறையான கழிப்பறை வசதிகூட இல்லை' - தூய்மைப் பணியாளர்களின் குமுறல்களுக்கு பதில்?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்களிடம் தூய்மைப் பணிக்கான ஆலோசனைகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

'தேங்க்யூ CM சார்' - மறுக்கப்பட்ட சாமி கும்பிடும் உரிமை; கோயில் நுழைவு மேற்கொண்ட பட்டியலின மக்கள்

பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பல தலைமுறைகளாக மாற்று சமூகத்தினரால் தடை விதிக்கபட்டு இருந்த நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி செயல்பாட்டால் பட்டியலின மக்கள் தடை நீங்கி, முதல் முறையாக கோயிலுக்... மேலும் பார்க்க

"அந்தச் சமயத்தில் சுவேந்து அதிகாரிதான் ஆறுதல் சொன்னார்" - TMC மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வராயன்மலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்... மேலும் பார்க்க

‘சார்... ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.ஜி.பி அருணுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதனால் முன்னாள்... மேலும் பார்க்க