செய்திகள் :

கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வராயன்மலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிங்கப்பெண் போலீஸார் இப்பள்ளிக்கு சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினர். தொடர்ந்து, அப்படி யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தங்களிடம் தனியாக தெரிவிக்குமாறும் கூறினர் சிங்கப்பெண் போலீஸார்.

போக்சோ வழக்கு

அதன்படி அவர்களை தனியாக சந்தித்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர், கணினி ஆசிரியர் சுரேஷ் என்பவர் தங்களை தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாகக் கூறிக் கதறி அழுதிருக்கின்றனர்.

அதில் அதிர்ந்து போன சிங்கப்பெண் போலீஸார் கரியாலூர் காவல் நிலையத்திற்கும், மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அந்தப் பள்ளிக்கு விரைந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.

அதில் ஆசிரியர் சுரேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

"அந்தச் சமயத்தில் சுவேந்து அதிகாரிதான் ஆறுதல் சொன்னார்" - TMC மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர... மேலும் பார்க்க

PMK: இணைந்த தந்தை - மகன் இதயங்கள்! - இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா‌.ம.க- வில் பதவி வழங்குவதில் ... மேலும் பார்க்க

‘சார்... ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.ஜி.பி அருணுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதனால் முன்னாள்... மேலும் பார்க்க

'மின்துறையின் கடன் இப்போது ரூ.2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது' - மின் வாரியத்தின் வெள்ளை அறிக்கை

கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு,நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த ... மேலும் பார்க்க

மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன?

2014-ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக, அவர் வசித்த பகுதிக்கு அருகிலுள்ள தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு அவரது பெயர் சூ... மேலும் பார்க்க

'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?

`பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்போவதாக' மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார்.திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாத... மேலும் பார்க்க