செய்திகள் :

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி

post image

கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற பாபு அப்துல்லா மற்றும் அவரது மனைவி நிஷாந்த் ஆகியோர் 38 வயதுடைய பெண்ணுடன் குடும்ப நண்பராகப் பழகி வந்தனர்.

அப்போது ஆசிக்பாபுவின் பேச்சு மற்றும் நடத்தைகளில் மாற்றம் இருந்தால் அந்தப் பெண், ஆசிக்பாபுவிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டார். ஆனாலும் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனப் பேசி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தான் குடியிருந்த தெருவில் இருந்து வீட்டைக் காலி செய்து வேறு தெருவில் குடியேறினார்.

பெண்ணிடம் அத்துமீறல்
பெண்ணிடம் அத்துமீறல்

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் கம்பம் தெற்கு போலீசார் ஆசிக் பாபு மீது கொலை மிரட்டல், ஆபசாமாகப் பேசியது,பெண்களுக்கு எதிராக அத்துமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிக் பாபு தலைமறைவாகியுள்ளார் அவரைத் தேடும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந... மேலும் பார்க்க

வருங்கால கணவனை கொலை செய்யும் முன்பு காதலனுடன் ஹோட்டலில் சதி: சிக்னல் கொடுத்தவுடன் தள்ளிவிட்ட காதலன்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!

தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலைய... மேலும் பார்க்க

காட்பாடி: கறாராக `லஞ்சம்’ கேட்ட அரசு பெண் மருத்துவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ள... மேலும் பார்க்க

பெங்களூரு : தாய், தந்தை, சகோதரியை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

பெற்றோர், சகோதரி உள்ளிட்ட மூன்று பேரை, மகளே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murderதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் எஞ்சினியரான சோம... மேலும் பார்க்க

கல்பாக்கம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேச் சென்றிருந்தார். வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும... மேலும் பார்க்க