செய்திகள் :

கல்பாக்கம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

post image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேச் சென்றிருந்தார். வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை மகளை தேடி சென்றார். அந்த வழியாக சென்றவர்கள் 'உங்கள் மகள் இந்த வழியாகத்தான் சென்றார்' என்று சொன்ன தகவலின் பேரில் சந்தேகமடைந்து, ஒரு மொட்டை மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு சிறுமி அலங்கோலமாக மயக்க நிலையில் கிடந்தார். இதைக் கண்டு பதறிய அவரது தந்தை தன்னுடைய மகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைத்திட்டு பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன் (20), அஜய் (27) இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது

கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அஜய் மரக்காணத்தில் உள்ள இறால் பண்ணையில் கூலிவேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்த தகவலில், `மகேஸ்வரன், இவரது நண்பர் அஜய் இவர்கள் இருவரும் 14 வயதான 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி அவரது வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, அங்கு இருவரும் மாறி, மாறி அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போராடிய அந்த சிறுமியை இருவரும் தலையில் ஒரு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்றனர்

காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு – கோவையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்!

கோவை, சுகுணாபுரம் மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள மஞ்சிப்பள்ளம் காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்... மேலும் பார்க்க

திருச்சி: திருமணம் மீறிய உறவில் கணவர்; தட்டிக் கேட்ட மனைவியை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ( 44). தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், சாவித்ரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது),(39) என்பவருக்கு... மேலும் பார்க்க

ரூ.17 கோடி அரண்மனை, தனி விமானங்கள்! வருங்கால மனைவியால் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வால் யார்?

புனேவில் மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இளம் தொழிலதிபர், அவரது வருங்கால மனைவியால் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. கோடிக்கணக்கில் செலவ... மேலும் பார்க்க

3 முறை முயன்று, 4வது முயற்சியில் வருங்கால கணவனை கொன்ற இளம்பெண்! - வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

புனேயில் லோஹாகட் கோட்டையில் கேதன் அகர்வால் என்பவர் மலையில் உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கேதனின் வருங்கால மனைவி ஷியா மற்றும் ஷியாவின் காதலன் ஆகியோர் கைது செய்... மேலும் பார்க்க

திருமணத்துக்கு ரூ.17 கோடிக்கு அரண்மனை முன்பதிவு - வருங்கால கணவனை, காதலன் துணையோடு கொன்ற மணப்பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தொழிலதிபர் அகர்வால் மகன் கேதன் அகர்வாலுக்கும், ஷியா கோயல் என்ற பெண்ணிற்கும் இடையே வரும் நவம்பர் மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு மு... மேலும் பார்க்க

தென்னை மரத்தை அகற்றக்கோரி பக்கத்து வீட்டுகாரர் வழக்கு! - பைபிள் வசனம் கூறி தள்ளுபடி செய்த கோர்ட்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கோபிநாத். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாகத்தான் இருந்தனர். ரஞ்சித் வீட்டில் வளர்ந்த... மேலும் பார்க்க