செய்திகள் :

Samantha: "நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும்" - கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சமந்தா

post image

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் 'மா இண்டி பங்காரம்' என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது.

தமிழில் இந்தப் படம் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Maa Inti Bangaaram - Samantha
Maa Inti Bangaaram - Samantha

இப்படத்தின் ரிலீஸுக்குப் பிந்தைய நிகழ்வு ஒன்றில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வைரலான பின்பு, சமந்தா கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

இத்தகவலைத் தற்போது நடிகை சமந்தா உறுதிப்படுத்தியிருக்கிறார். நேற்று நடைபெற்ற 'மா இண்டி பங்காரம்' படத்தின் சக்சஸ் மீட்டில் இத்தகவலை அவர் பகிர்ந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் பேசியவர், "இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்கப்போகிறேன். அதன் பிறகு நான் மீண்டும் வந்துவிடுவேன்! நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." என்றார்.

Samantha - Raj Nidimoru
Samantha - Raj Nidimoru

சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன்" - நடிகர் விஷ்ணு விஷால்

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் திரைக்... மேலும் பார்க்க

``அவர் உண்மையான பண்பாளர்" - முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யா நெகிழ்ச்சி

நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன் நேற்று முதல்வர் விஜய்யை அவரின் அலுவலகம் சென்று சந்தித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஆறு மாதங்களுக்கு முன்பு, மலேசியாவி... மேலும் பார்க்க

Lingam: "எல்லாரும் என்னை 'ஓடிடி ஹீரோ'னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க!" - 'லிங்கம்' குறித்து கதிர்

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ... மேலும் பார்க்க

Lingam: "குமரியை உலுக்கிய ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய கதை!" - விகடன் டெலிவிஸ்டாஸ் ராதா

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ... மேலும் பார்க்க

Lingam: "'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு 'லிங்கம்' தொடரில் மாறுபட்ட கதாபாத்திரம்!" - திவ்யபாரதி

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. சென்னையில் இந்த வெப் சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ... மேலும் பார்க்க

Lingam: "நான் என் நிஜ வாழ்க்கையில் சந்தித்த வன்முறைகளின் பின்னணியே..." - லக்ஷ்மி சரவணக்குமார்