செய்திகள் :

கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் பின்தங்கும் இந்தியா... நிதி ஆயோக் எச்சரிக்கை, செவிசாய்க்குமா அரசு?

post image

வேகமாக வளரும் பொருளாதாரம், டிஜிட்டல் புரட்சி, வேறெந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரும் இளைஞர் வளம் என்று நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி களில் பிற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளரவில்லை என்ற கவலைக்குரிய உண்மையைச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது நிதி ஆயோக்.

உலகம் முன்னேறுவதே புதிய கண்டுபிடிப்புகளாலும் ஆராய்ச்சிகளாலும்தான். ஆனால், Global Innovation Index-ல் இந்தியா 38-வது இடத்தில் உள்ளது. சீனா 11-வது இடத்தில் உள்ளது. ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன் போன்ற சிறிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி என்பது டிஜிட்டல் சேவைகள், ஐ.டி ஏற்றுமதி, ஸ்டார்ட்அப் போன்ற துறைகளால் உருவானது. ஆனால், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காப்புரிமைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் போன்ற சமகால மற்றும் எதிர்காலத்துக்கான தொழில்நுட்பங்களில் இந்தியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) அதிக முதலீடுகளைச் செய்ததன் பலனாகவே, அமெரிக்கா, சீனா, தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள் இன்று பெரும் தொழில்நுட்ப சக்திகளாக மாறியுள்ளன. ஆனால், இந்தியா ஜிடிபியில் வெறும் 0.7% மட்டுமே ஆராய்ச்சிக்குச் செலவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடுகள் பெரும்பாலும் தொழில்துறையிலிருந்தே வருகின்றன. இந்தியாவிலோ அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆராய்ச்சிக்குச் செலவுசெய்யும் அளவுக்குக்கூட தனியார் நிறுவனங்கள் செய்வதில்லை. உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஆக்கபூர்வமான இணைப்பு இல்லாததால், ஆய்வகங்களில் உருவாகும் அறிவும் கண்டுபிடிப்பும் சந்தைக்கு வராமலேயே தடைபடுகின்றன.

இந்தியாவில் உருவாகும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. திறமையான ஆராய்ச்சியாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். திறமைகளை உருவாக்குவதில் இந்தியா இன்னும் பலபடி முன்னகர வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இடையே புதிய கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான நிதி மற்றும் உள்கட்டமைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஜிடிபி-யில் குறைந்தபட்சம் 2 சதவிகிதமாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கென ஒதுக்கப்பட வேண்டும். புதிய மருந்துகள், சிப்கள், AI மாதிரிகள், எரிசக்தி தொழில்நுட்பங்கள் இந்திய ஆய்வகங்களில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கான அடித்தளத்தை உருவாக்கவேண்டிய அவசரத் தேவையையே நிதி ஆயோக் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினால், இந்தியா உலகின் முன்னணி கண்டுபிடிப்பு சக்தியாக மாற முடியாது. அரசும் தொழில்துறையும் கைகோத்து, இந்தியாவை எதிர்காலத்துக்கான பயணத்தில் முன்னோக்கி எடுத்துச் செல்லவேண்டும். வளர்ந்த இந்தியா என்பது வெறும் வார்த்தைகளல்ல, செயல்!

- ஆசிரியர்

'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச் சென்றது.ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்திய ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து, ரூ.94-95-க்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மிக முக... மேலும் பார்க்க

மதுபாட்டில், மோசமான உணவு: புகார்களை அடுக்கிய மாணவர்கள் - தன் போன் நம்பரை கொடுத்துச் சென்ற அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 2... மேலும் பார்க்க

"வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்"- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க

அழுகும் நெல்மணிகள் : `தற்காலிகத் தீர்வுகள் விடிவு தராது' - நிரந்தர தீர்வை தருமா புதிய அரசு?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரர் பகுதியில் கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழையால் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 50,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி ... மேலும் பார்க்க

HBD CM Vijay: முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் & சினிமா பிரபலங்கள்!

Wishing my brother, our Honorable CM of Tamilnadu, Thiru. Joseph Vijay avargale, a very very happy and healthy birthday. May God bless you in abundance. Loads of love. ❤️❤️❤️❤️❤️ @CMOTamilnadu #Vijay#... மேலும் பார்க்க

ஈரோடு: தூய்மைப் பணியைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு - போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள சில மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புக... மேலும் பார்க்க