செய்திகள் :

Doctor Vikatan: சத்தமாகப் பேசும் பிரச்னை... அடுத்தவருக்கு அசௌகர்யம்... தீர்வு உண்டா?

post image

Doctor Vikatan:  எனக்கு ஒரு விசித்திரமான பிரச்னை உள்ளது. நான் எப்போது, எங்கு பேசினாலும் மிகவும் சத்தமாகப் பேசுகிறேன். இது பெரும்பாலும் மற்றவர்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது.

நான் விழிப்பு உணர்வோடு மெதுவாகப் பேச முயற்சி செய்யும்போது கூட, சில நொடிகளிலேயே எனது குரல் மீண்டும் சத்தமாகி விடுகிறது. இது என்ன மாதிரியான பிரச்னை, இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி.

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவரும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான ஆர்.பாலாஜி

வழக்கமாக சுமார் 35-50 டெசிபல் சத்தத்தில் பேச வேண்டிய இடங்களில்கூட, சிலர் 70-80 டெசிபலில் மிக உரத்த குரலில் கத்திப் பேசுவதை நாம் பார்க்கலாம். இதன் பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். உங்களுக்கு எந்தக் காரணத்தால் இந்தப் பாதிப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால், அதற்கான தீர்வைத் தேடுவது எளிதாகும்.

முதல் விஷயம் இயர்போன்ஸ் (Earphones) அல்லது ஏர்பாட்ஸ் (Airpods) பயன்பாடு. இப்போதெல்லாம் பலரும் காதுகளில் இயர்போனையோ, ஏர்பாட்ஸையோ மாட்டிக்கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டே மற்றவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களது கவனம் வேறொன்றில் இருப்பதால், அந்தச் சூழலில் மற்றவர்களுடன் பேசும்போது தங்களையும் அறியாமல் உரத்த குரலில் பேசுவார்கள். 

உங்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hearing Loss) ஏதேனும் உள்ளதா என்பதையும் நீங்கள் டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்கள், தங்களுக்குச் சரியாகக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தானாகவே உரத்த குரலில் பேச முயற்சி செய்வார்கள்.

எனவே, ஒருவர் தொடர்ந்து சத்தமாகப் பேசி வருகிறார் எனில், அவருக்கு அனைத்து அலைவரிசைகளிலும் (Frequencies) கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யும் வகையில் ஆடியாலஜிக்கல் பரிசோதனை (Audiological Evaluation) செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அதற்குரிய தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

அனைத்து அலைவரிசைகளிலும் (Frequencies) கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில் ஆடியாலஜிக்கல் பரிசோதனை (Audiological Evaluation) செய்ய வேண்டும்.

சிலருக்கு இயல்பாகவே சத்தமாகப் பேசுவது ஒரு பழக்கமாக இருப்பதையும் பார்க்கலாம். அதேபோல குறிப்பிட்ட சில பணிகளைச் செய்பவர்களுக்கும் இந்தப் பழக்கம் ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, பேச்சாளர்கள், பாடகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோர் தங்கள் குரலை எப்போதும் உரக்கப் பயன்படுத்திப் பழக்கப்பட்டவர்கள்.

இந்தத் தொடர் பழக்கத்தின் காரணமாக (Habituation), அவர்கள் சாதாரணமாகப் பேசும்போதும் அவர்களின் குரல் உரத்த தொனியிலேயே வெளிப்படலாம்.

நரம்பியல் சார்ந்த (Neurological) பிற காரணங்களால் சத்தமாகப் பேசுவது என்பது மிகவும் அரிதான ஒன்று என்பதால், சத்தமாகப் பேசுபவர்களுக்குக் கேட்கும் திறன் குறைபாடு (Hard of hearing) உள்ளதா என்பதை முதன்மையாகக் கவனித்து அதைக் கண்டறிவதுதான் மிகவும் அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: பாடாகப் படுத்தும் பாதவெடிப்பும், எரிச்சலும்... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: என் வயது 35. எனக்கு சிறு வயதிலிருந்தே பாதவெடிப்பு பிரச்னை இருக்கிறது. திடீரென அதிகமாகும்... வெடிப்புகளில் இருந்து ரத்தம் வரும். ஆயின்மென்ட் போட்டால் ஓரளவு சரியாகும். இந்தப் பிரச்னைக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதும் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள்; விரட்டவும் விடுபடவும் தீர்வுகள் உண்டா?

Doctor Vikatan:எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமிக்கின்றன. அதிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியவில்லை. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் என்ன... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல்சோர்வு, உடல் வலி... வைட்டமின் டி மாத்திரை எடுத்தால் சரியாகுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த ஒரு வருடமாக கடுமையான உடல் வலியும், எப்போதும் உடல் சோர்வும் இருப்பதாக உணர்கிறேன். வைட்டமின் டி பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் என்றும், அந்த சப்ளிமென்ட் எடுத்தால் சரியாகி... மேலும் பார்க்க

Doctor Vikatan: புரோட்டீன் டிரிங்க்: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் குடிக்கவேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் புரோட்டீன் பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் குடிக்கிறான். புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் வொர்க் அவுட் செய்பவர்கள்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.... உடற... மேலும் பார்க்க

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிட... மேலும் பார்க்க