செய்திகள் :

Doctor Vikatan: உடல்சோர்வு, உடல் வலி... வைட்டமின் டி மாத்திரை எடுத்தால் சரியாகுமா?

post image

Doctor Vikatan: எனக்கு கடந்த ஒரு வருடமாக கடுமையான உடல் வலியும், எப்போதும் உடல் சோர்வும் இருப்பதாக உணர்கிறேன்.

வைட்டமின் டி பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் என்றும், அந்த சப்ளிமென்ட் எடுத்தால் சரியாகி விடும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இது உண்மையா... இந்தப் பிரச்னைக்கு வேறு தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

சோர்வுக்கும் உடல் வலிக்கும் வைட்டமின் டி (Vitamin D) குறைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக எத்தனை பேருக்கு ரத்தப் பரிசோதனை (Blood test) செய்து பார்த்தாலும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் டி 3 அளவு 10-லிருந்து 20-க்குள்ளாகத்தான் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

அது 25-க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், பலருக்கும் அப்படி இருப்பதில்லை. மாத்திரை சாப்பிடுபவர்களுக்கே 35-லிருந்து 40 வரைதான் இருக்கிறது. எனவே, வைட்டமின் டி குறைபாடும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது.

நாள்பட்ட உடல் வலி மற்றும் சோர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கக்கூடும். மனது உற்சாகமில்லாமல் இருப்பதுகூட  முக்கிய காரணமாகும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது (Physical inactivity) இன்னொரு காரணம். தமிழ்நாட்டில் பொதுவாக மாவுச்சத்து (Carbohydrates) நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. 

போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, 60 கிலோ எடை உள்ளவர்கள் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்காமல் போகும்போது ஏற்படும்  புரதச்சத்துக் குறைபாட்டினாலும் உடல் வலி வரலாம்.

வெறும் சோறு, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், இட்லிப்பொடி என்றே சாப்பிடுவதால்  நம்முடைய உணவில் மற்ற வைட்டமின்கள் எதுவும் பெரிய அளவில் இருப்பதில்லை. அதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் (Dry fruits) மற்றும் பருப்பு வகைகள் (Nuts) போன்றவற்றைச் சாப்பிடாததால் மல்டி வைட்டமின் குறைபாடுகள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அசைவ உணவு (Non-veg) சாப்பிடுபவர்களுக்குக் கூட ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், வைட்டமின் பி 12 அளவு 112 அல்லது 113 என்ற அளவில்தான் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், அது 160 அல்லது 180-க்கு மேல் இருந்தால் நல்லது. உடலில் பி-காம்ப்ளெக்ஸ் (B-Complex) சத்து இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

வெறும் சோறு, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், இட்லிப்பொடி என்றே சாப்பிடுவதால் நம்முடைய உணவில் மற்ற வைட்டமின்கள் எதுவும் பெரிய அளவில் இருப்பதில்லை.

60 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தச்சோகை (Anemia) உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் (Hemoglobin) அளவு குறைவாக இருப்பதும்  உடல் வலி மற்றும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர, மற்ற உடலுறுப்புகளின் செயல்பாடுகளையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஈரல், சிறுநீரகங்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்தை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் ஒரு காரணம். வியர்வையின் வழியாக உடலில் உள்ள உப்பு வெளியேறிவிடுவதால், உடலில் போதிய உப்புச்சத்து இல்லாமல் போவதும் இந்த வெயில் காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் கை, கால் வலிக்குக் காரணமாக இருக்கலாம். 

எனவே, நாம் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  சமச்சீர் உணவு (Balanced diet) எடுத்துக் கொள்கிறீர்களா என்றும் பாருங்கள். இப்படி எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் உங்கள் சோர்வு மற்றும் உடல் வலிக்கான காரணம் அறிந்து சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: புரோட்டீன் டிரிங்க்: வொர்க் அவுட் செய்பவர்கள் மட்டும்தான் குடிக்கவேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய நண்பன் ஒருவன் புரோட்டீன் பவுடர் வாங்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளைகள் குடிக்கிறான். புரோட்டீன் சப்ளிமென்ட்டுகள் வொர்க் அவுட் செய்பவர்கள்தானே எடுத்துக்கொள்ள வேண்டும்.... உடற... மேலும் பார்க்க

ஈரோடு: சர்வதேச யோகா தின விழா; ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்! | Photo Album

ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா தினவிழா ஈரோட்டில் யோகா த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 5 வருடங்களாக தைராய்டு பாதிப்பு இருக்கிறது. அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். தைராய்டு மாத்திரைகளை நம் ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா... இடையில் நிறுத்திவிட... மேலும் பார்க்க

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும் நாள்களில் குளிக்கலாமா... அது காய்ச்சலைக் குறைக்குமா?

Doctor Vikatan: காய்ச்சல் இருக்கும்போது குளிக்கக்கூடாது என்கிறார்கள் சிலர். அப்படியில்லை, குளித்தால் காய்ச்சல் குறையும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் காய்ச்சல் இருக்கும்போது குளிப்பது சரியா, த... மேலும் பார்க்க

ஈரோடு: சர்வதேச யோகா தினத்தையொட்டி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி | Photo Album

ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்ஈரோட்டில் யோகா தினம்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வார இறுதிநாள்களில் மட்டும் வரும் தலைவலி... எனக்கு மட்டும் ஏன் இப்படி?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வார நாள்களில் சாதாரணமாக இருக்கிறேன். வாரக் கடைசி வந்தால் மட்டும் எனக்கு ஒரு பக்கத்தில் கட... மேலும் பார்க்க