செய்திகள் :

4 வாக்காளர் அட்டைகள் வைத்திருப்பதாக வழக்கு; பிரகாஷ்ராஜுக்கு பிடிவாரண்டா?உண்மை என்ன?

post image

நான்கு மாநிலங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து அதிரடியாகக் கருத்துகளைக் கூறி வருகிறார்.

இந்நிலையில் வழக்கறிஞர் தீலிப்குமார் என்பவர் பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால், நடிகர் பிரகாஷ்ராஜிடம் 4 மாநில வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார். இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன். நடவடிக்கை இல்லை.

எனவே, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

பிரகாஷ் ராஜ்

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சொல்லப்படுகிறது. ,

இதையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் உடனே ஆஜராக நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரகாஷ்ராஜுவை பெங்களூரு காவல்துறையினர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்று தகவல் பரவிய நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜோ, தனது எக்ஸ் தளத்தில், "பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்புவதில் ஈடுபட்டு தங்களை விற்றுக்கொண்டவர்கள் பாவம், அவர்களுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்க வேண்டும்…

தங்களை விற்றுக்கொண்டவர்கள்... பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் பாதிப்பும் வேதனையும் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களை நான் தொடர்ந்து பிஸியாக வைத்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி உள்ளது..." என்று பதிவிட்டு இந்தத் தகவலை மறுத்துள்ளார்.

சட்டமன்றக் கூட்டம்: இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முதல்வர் விஜய் பதிலளிப்பாரா? | Live Update

முதல்வரின் பதில்கள் இன்று!முதல்வர் விஜய்சட்டமன்றத்தின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எழுந்த சலசலப்பில் அதிமுக பொதுச் செயலா... மேலும் பார்க்க

பிரிட்டன்: ஸ்டார்மர் அதிரடி ராஜினாமா... அடுத்த பிரதமராகப் போகிறாரா ஆண்டி பர்ன்ஹாம்? யார் இவர்?!

பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.பிரிட்டன் அரசியலில் பெரும் தி... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்-யின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்… அரசாணை வெளியீட்டில் எழும் கேள்விகள்!

தமிழக முதல்வர் விஜயின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், அந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிய விதம் அரசியல் வட்டாரங்... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாரணையில், ''தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப... மேலும் பார்க்க

சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; MLA குழந்தைக்கு பெயர் சூட்டு விழா - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.சபரீசன்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவையில் உரையாற்றியிருந்தார். அவர் பேசுவ... மேலும் பார்க்க

பிரிட்டன்: 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் - உலகை ஆண்ட நாட்டின் தற்போதைய நிலை என்ன?

ஒரு காலத்தில் சூரியன் மறையாத பேரரசு எனக் கூறப்பட்ட பிரிட்டிஷ் அரசு, இப்போது நிலையான ஆட்சியாளர்கள் இல்லாமல் தத்தளிக்கிறது. பிரிட்டிஷ் மக்களுக்கு வரிசைகளில் நிற்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பார்கள்... மேலும் பார்க்க