செய்திகள் :

"அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி

post image

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது.

துரை வைகோ
துரை வைகோ

இந்நிலையில் திருச்சியில் நேற்று (ஜூன்.26) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மை செயலரரும் எம். பி-யுமான துரை வைகோ முதல்வர் விஜய்யைப் பாராட்டி பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே மக்கள் தவெக மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்துதான் வாக்களித்து இருக்கின்றனர். எனவே இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக தவெக 65 % வாக்குகளைப் பெறும்.

முதலமைச்சர் விஜய் அவ்வளவாகப் பேசவில்லை என்றாலும் செயல்படும் முதலமைச்சராக இருக்கின்றார். அதுதான் மிக முக்கியமான விஷயம்.

என்னுடைய திருச்சி தொகுதிக்கு உட்பட்ட மெட்ரோ ரயில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல கோரிக்கைகளோடு முதல்வரைச் சந்தித்தேன்.

துரை வைகோ
துரை வைகோ

அடுத்த நாளே அதிகாரிகள் என்னைக் கூப்பிடுகின்றனர். ஒரு செயல்படும் அரசைப் பார்க்கிறேன். ஒரு செயல்படும் அமைச்சரவையைப் பார்க்கிறேன்.

ஒரு செயல்படும் முதல்வரைப் பார்க்கிறேன். செயல்படும் முதல்வராக இருக்கும் விஜய்க்கு நன்றி" என்று பாராட்டி பேசியிருக்கிறார்.

'சோதனையின்போது வீட்டிலிருந்து ரூ. 40 லட்சம் எடுத்தார்களா?' - எ.வ.வேலு சொல்வது என்ன?

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ‘அறப்போர் ... மேலும் பார்க்க

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்து பங்கேற்ற முதல்வர் விஜய் | Live Updates

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்; விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து மக்களோ... மேலும் பார்க்க

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்... கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்! மேலும் பார்க்க

'மீண்டும் பழையபடி வணிக சிலிண்டர்கள் கிடைக்கும்' - கட்டுப்பாடுகளைத் தளர்த்திய மத்திய அரசு

ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம், வணிக சிலிண்டர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப... மேலும் பார்க்க

அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026'-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி மு... மேலும் பார்க்க

'துணைப் பொதுச்செயலாளராகும் எஸ்.பி.வேலுமணி' - அதிமுகவில் புதிய நியமனம்; யார்,யாருக்கு என்னென்ன பதவி?

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று பிரிந்திருந்தது. அதற்குப் பின்னான சமரசங்களுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் டீமில்... மேலும் பார்க்க