செய்திகள் :

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்: விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்து பங்கேற்ற முதல்வர் விஜய் | Live Updates

post image

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்; விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து மக்களோடு மக்களாகவும் பங்கேற்றிருக்கிறார்.

சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரியவில்சன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து, "நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்;

போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்;

மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்’’ என்று முதலமைச்சர் விஜய் தலைமையில் மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

"அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்" - துரை வைகோ உறுதி

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்... கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்! மேலும் பார்க்க

'மீண்டும் பழையபடி வணிக சிலிண்டர்கள் கிடைக்கும்' - கட்டுப்பாடுகளைத் தளர்த்திய மத்திய அரசு

ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம், வணிக சிலிண்டர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப... மேலும் பார்க்க

அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026'-ஐ கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பாஸ்போர்ட்களின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு வருகிற ஜூலை 1-ம் தேதி மு... மேலும் பார்க்க

'துணைப் பொதுச்செயலாளராகும் எஸ்.பி.வேலுமணி' - அதிமுகவில் புதிய நியமனம்; யார்,யாருக்கு என்னென்ன பதவி?

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று பிரிந்திருந்தது. அதற்குப் பின்னான சமரசங்களுக்குப் பிறகு, சி.வி.சண்முகம் டீமில்... மேலும் பார்க்க

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன்.25) மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் முன்... மேலும் பார்க்க