செய்திகள் :

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

post image

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன்.25) மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து பேசியிருக்கிறார்.

TNEB White Paper
EB வெள்ளை அறிக்கை

"பல தகவல்களை மறைத்து அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வால் மட்டும் அல்ல, சீர்த்திருத்தங்கள் வாயிலாக வருவாயை அதிகரித்துள்ளோம்.

திமுக ஆட்சியில் மின் தேவை கணிசமாக அதிகரித்தது. சீரான மின் விநியோகத்துக்கு ஸ்டாலின் வித்திட்டார். வருவாய் பற்றாக்குறையை ரூ.34,000 கோடியாகக் குறைத்தோம்.

அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறையைக் குறைத்தது திமுக அரசு. தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆகஸ்டில் தேர்வு வைத்தோம். இப்போது அவர்கள் பணி ஆணையை வழங்கி இருக்கிறார்கள். திமுக ஆட்சியின் பணி நியமன ஆணையைத்தான் விஜய் தற்போது வழங்கினார்.

தேர்தல் வரவில்லை என்றால் நாங்களே பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்போம். நீங்கள் 40 நாள்களில் தேர்வு வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களா?

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் செலவு ஏற்பட்டது. அதனை ஏன் வெள்ளை அறிக்கையில் சொல்லவில்லை.

5 ஆண்டுகளில் மின்சாரத்துறைக்காக எந்தத் திட்டமும் தொடங்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் வட சென்னை அனல் மின்நிலையத்திட்டம்-3, உடன்குடி மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பணியாளர் பற்றாக்குறை என்கின்றனர். இப்போது இருக்கும் ஊழியர்களை வைத்துதான் சீரான மின்சாரம் தந்தோம். திமுக ஆட்சியிலும் இதே பணியாளர்கள்தான் இருந்தார்கள்.

பணி நியமனம், பணி உயர்வு விவரத்தை தவெக அரசு மறைப்பது ஏன்? பணி நியமன ஆணையிலும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

ராமதாஸ் - அன்புமணி: `நீங்க எல்லோரும் ஒன்னா நல்லா இருங்க' - பாச சந்திப்பை புறக்கணித்த ஸ்ரீகாந்தி?

பா.ம.க-வில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், நேற்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத... மேலும் பார்க்க

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' - அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "தமிழகத்தில் பொத... மேலும் பார்க்க

'ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை!' - EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். 2001 முதல் 2026 மார்ச் வரை விரியும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த திமுக அரசின் மீது நிறைய க... மேலும் பார்க்க

"'மந்திரி சபையிலும் இடம், திமுகவிலும் தொடர்கிறோம்' எனச் சிலர் சொல்வது எனக்கு புரியவில்லை" - வைகோ

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.... மேலும் பார்க்க

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' - சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில், தனியார் துறையின் மிகப்பெரிய தங்கம் சுரங்கம் மற்றும் தங்கம் பிரித்தெடுக்கும் ஆலையை ஆந்திர முதல்வர் என். சந்திரப... மேலும் பார்க்க