செய்திகள் :

Mr Beast & Cristiano Ronaldo: `ரொனால்டோ மிகச்சிறந்த மனிதர்' - நெகிழும் மிஸ்டர் பீஸ்ட்!

post image

யூடியூப் உலகின் முடிசூடா மன்னன் மிஸ்டர் பீஸ்ட் (MrBeast). யூடியூப் தளத்தில் 500 மில்லியன் (50 கோடி) சந்தாதாரர்களைக் கடந்த முதல் தனிநபர் படைப்பாளி என்ற மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர். அதுபோல், உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) .இவர்கள் இருவரும் 2024-ம் ஆண்டின் இறுதியில் இணைந்து வீடியோக்களை வெளியிட்டனர். இணையத்தை முடக்கும் அளவுக்கு இந்த கூட்டணி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

MrBeast Cristiano Ronaldo
MrBeast Cristiano Ronaldo

2024-ம் ஆண்டு நடந்த கொலாபரேஷன் வீடியோ படப்பிடிப்பின் போது ரொனால்டோவின் அணுகுமுறை தன்னை எவ்வளவு வியப்பில் ஆழ்த்தியது என்பது குறித்து, மிஸ்டர் பீஸ்ட் சமீபத்தில் Click Baited என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மனம்திறந்து பேசியுள்ளார்.

``ரொனால்டோ போன்ற உலகப்புகழ்பெற்ற, மிகவும் பரபரப்பான ஒரு விளையாட்டு வீரருடன் வீடியோ எடுப்பது சாதாரண விஷயமல்ல. அவருக்கு நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும், எனவே ஒரு சில நிமிடங்களில் அவசர அவசரமாக படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். ரொனால்டோவின் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக, கிடைக்கப்போகும் அந்தச் சிறிய நேரத்திற்கு ஏற்றவாறு அனைத்து சவால்களையும் முன்கூட்டியே கச்சிதமாக திட்டமிட்டு வைத்திருந்தேன்.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நடந்தது வேறு. எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக, ரொனால்டோ எந்த அவசரமும் காட்டவில்லை. `வீடியோ மிகச் சிறப்பாக வர வேண்டும், எனவே உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், எந்த அவசரமும் இல்லை’ என்று ரொனால்டோ மிகவும் இயல்பாகக் கூறியுள்ளார். எந்தவித அழுத்தமும் இல்லாமல் ரொனால்டோ கொடுத்த இந்த சுதந்திரம் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்தது.

படப்பிடிப்பு முடிந்தவுடன் வேலை முடிந்தது என நான் கிளம்ப தயாரானேன். ஆனால், ரொனால்டோ என்னை விடுவதாக இல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு வருமாறு ரொனால்டோ அன்போடு அழைத்தார். `நீங்கள் எனக்கு நிறைய நேரம் கொடுத்துவிட்டீர்கள், இதுவே போதும்’ என்று நான் பலமுறை கூறியும், ரொனால்டோ அதை கேட்கவில்லை.’’ என்று மனம் திறந்து நெகிழ்வாகப் பேசியுள்ளார் மிஸ்டர் பீஸ்ட்.

இவர்களது இந்த கூட்டணியில், ரொனால்டோவின் யூடியூப் சேனலில் "I Meet MrBeast To Break The Internet!!" என்ற வீடியோவும், மிஸ்டர் பீஸ்டின் சேனலில் "Beat Ronaldo, Win $1,000,000" என்ற வீடியோவும் வெளியாகி பார்வையாளர்களின் சாதனைகளை முறியடித்தன. இந்த வீடியோக்கள் ரொனால்டோவின் யூடியூப் சேனல் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

மிஸ்டர் பீஸ்ட் என்று மக்களால் அழைக்கப்படும் ஜிம்மி டொனால்ட்சன்
MrBeast

"ரொனால்டோ ஒரு மிகச் சிறந்த மனிதர், நான் நினைத்ததை விட அவர் என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார்" என்று மிஸ்டர் பீஸ்ட் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். உண்மையான ஆளுமை என்பது வெறும் சாதனைகளில் மட்டுமல்ல, மற்றவர்களை அவர்கள் நடத்தும் விதத்திலும் இருக்கிறது என்பதை இந்த சுவாரசியமான சந்திப்பு நமக்கு உணர்த்துகிறது.

மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? - டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்?

ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கி... மேலும் பார்க்க

FIFA 2026: பீர் தீர்ந்தது, நகரம் அதிர்ந்தது - 28 வருட ஏக்கத்தைக் கொண்டாடிய ஸ்காட்லாந்து ரசிகர்கள்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழாவின்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுதான் இது. கால்பந்து என்றாலே கொண்டாட்டம... மேலும் பார்க்க

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூ... மேலும் பார்க்க

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 'Group L' பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங... மேலும் பார்க்க

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா. குரூப் A, குரூப் B என மொத்தம் 12 அணிகள் களம் காணும் இந்தத் தொடரில், ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கையோடு இருபது ... மேலும் பார்க்க

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க