செய்திகள் :

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், இன்று மதியம் அன்புமணி தன்னுடைய மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தார்.

அப்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவர் ராமதாஸ் அன்புமணியைக் கட்டிப் பிடித்து கண்கலங்கியதும், அதன் பிறகு அன்புமணி உள்ளிட்டவர்கள் ராமதாஸ் மற்றும் அவரது மனைவி காலில் விழுந்து ஆசி வாங்கிய வீடியோக் காட்சிகளும் வெளியானது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அதையடுத்து அங்கிருந்து பனையூர் கிளம்பிய அன்புமணியிடம், `இரண்டு அணிகளாக இருந்த பா.ம.க ஒன்றாக இணையுமா?' என்று எழுப்பிய கேள்விக்கு, `இனி நல்லதே நடக்கும்' என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

அதன்பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பா.ம.க.வின் மூத்த தலைவர் ஜி.கே.மணி, ``இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை மருத்துவர் அன்புமணி அவர்கள் சந்தித்துப் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தச் சந்திப்பை மனதார வரவேற்கிறேன். மருத்துவர் ராமதாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட பா.ம.க தமிழ்நாட்டில் வலிமையான, தவிர்க்க முடியாத சக்தியாக இருந்ததை நாடு அறியும்.

இடையிலேயே சற்றுத் தொய்வு ஏற்பட்டது. இந்த சந்திப்பு நல்ல சந்திப்பு. குடும்பப் பாசமும், குடும்ப உறவும் மீண்டும் நிலைத்திருக்கிறது. இருவரின் சந்திப்பு இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படுகிற ஒன்றாக அமைந்துள்ளது.

இந்தச் சந்திப்பு இன்னும் கொஞ்சம் முன்பாக நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும் காலம் தாழ்த்தியாவது இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசும் போது கருத்து வேறுபாடு மறைந்துபோகும். மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி இருவரும், அனைத்து நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி முடிவெடுத்தால் கட்சி வேகமாகச் செல்லும்.

ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி

மருத்துவர் அன்புமணி அவர்கள் ஏற்கனவே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். இடையில் வருத்தமான சூழலால் பேச முடியவில்லை. இப்போது மருத்துவர் ராமதாஸ் அவர்களைப் பார்த்த பிறகு மீண்டும் பேசுவார்.

இது ஒரு நல்ல தொடக்கம். தற்போது கட்சியில் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பொறுப்பாளர்கள் எனப் பிரிந்து இருப்பதை மறுக்கவில்லை. அவர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும் போது அடிமட்டத் தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கத்தான் செய்யும்.

அதேசமயம், மருத்துவர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி அவர்களும் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து, இனி ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று பேசினால் சரியாகிவிடும்" என்றார்.

`அன்பில் மகேஸ் செய்திருப்பது அநாகரிகம்; விளைவுகளை சந்திக்க நேரிடும்'- அமைச்சர் விஸ்வநாதன் எச்சரிக்கை

மதுரை மேலூரில் மாணவர்கள் கலந்துகொண்ட மாரத்தான் நிகழ்வில் தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மாணவிகளின் காலை பிடித்து விட்டது சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, திமுக வழக்கறிஞர்கள் குழுவிலி... மேலும் பார்க்க

`தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்...' - மு.வீரபாண்டியன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில் முதல்வர் விஜய் பேசிய உரை பேசுபொருளானது. இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் சிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச்செ... மேலும் பார்க்க

"முதல்வருக்கான மாண்பை பேண வேண்டும்: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- திருமாவளவன்!

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில் முதல்வர் விஜய் பேசிய உரை பேசுபொருளானது. இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விசிக-வின் தலைவரும், எம்.பி-யுமா... மேலும் பார்க்க

’பாஜகவிடம் தவெக என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது’ – நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “தி.மு.க-வை பொறுத்தவரை அவர்களின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் ... மேலும் பார்க்க

``த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' - காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், இன்று( ஜூன்,24) காலை வழக்கம்போலத் தொடங்கிய மாமன்றக் கூட்டம், யாரும் எதிர்பாராத ஒரு ‘சினிம... மேலும் பார்க்க

அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி... இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

பிரதமர் ராஜினாமா!16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய இங்கிலாந்து, தனது வலிமையான கடற்படை மற்றும் தொழிற்புரட்சியின் துணையோடு 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளைத் த... மேலும் பார்க்க