செய்திகள் :

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

post image

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் தேவையின்றி பேருந்துகளை இயக்கி எரிபொருளை வீணாக்குவது கண்டிக்கத்தக்கது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் மொத்தம் 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. மாநகரப் போக்குவரத்துக் கழகம், விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் உள்ளன. மீதமுள்ள 6 போக்குவரத்துக் கழகங்கள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்கவிழா கடந்த 22-ஆம் தேதி முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் புதிய பேருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளுக்கு வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, புதிதாக தொடங்கி வைக்கப்படவுள்ள 300 பேருந்துகளில் மாநகர மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தவிர மீதமுள்ள அனைத்தும் நாகர்கோயில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22-ஆம் தேதியும், 23-ஆம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்துக்கும் இரு ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர். புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த இரு நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குழப்பமும், தொழிலாளர்களின் அவதியும் இன்னும் எத்தனை நாள்களுக்கு தொடரும் என்று தெரியவில்லை.

அன்புமணி
அன்புமணி

ஒரு பேருந்தை ஒரு முறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், அதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

ஏற்கனவே போக்குவரத்துக் கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும். நாடே எரிபொருள் தட்டுப்பாட்டால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 300 பேருந்துகளை வீணாக பல நூறு கி.மீ தொலைவுக்கு இயக்குவது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயலாகும். கடந்த காலங்களில் புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்படும் போது சில மண்டலங்களில் இருந்து மட்டும் பெயரளவுக்கு வரவழைத்து விழாவை நடத்துவது தான் வழக்கம்.

இப்போது 300 பேருந்துகளை தேவையின்றி சென்னைக்கு வரவழைத்திருக்கக் கூடாது. இவை அனைத்தும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமல் நடக்கிறதா? என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக திரும்பிச் செல்ல ஆணையிட வேண்டும். புதிய பேருந்துகளை தேவையில்லாமல் சென்னைக்கு அழைத்து வர அறிவுறுத்திய அதிகாரிகள் யாராக இருந்தால் அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.... மேலும் பார்க்க

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பார் வசதியோடு செயல்பட்டு வரும் அந்தக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறி... மேலும் பார்க்க

`தளபதி விஜய்...'- பேசிய காங்கிரஸ் கவுன்சிலர்; கூச்சலிட்டு அவையை முடக்கிய திமுகவினர்! - என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.திமுக -காங். மோதல்அவையில் நேரம... மேலும் பார்க்க

ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவல்; ஈரான் மறுப்பு!

போர் நிறுத்தத்தில் ஈரானுக்கு இருக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று - ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த... மேலும் பார்க்க

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது" என்று தவெக அரசை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வ... மேலும் பார்க்க

விமர்சித்த அதிமுக கவுன்சிலர்; அடிக்க பாய்ந்த திமுக கவுன்சிலர்கள்! - மாநகராட்சி கூட்டத்தில் கடமுடா!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தின் போது அதிமுகவின் கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் திமுகவினரை விமர்சனம் வைக்க, வாக்குவாதம் முற்றி திமுகவினர் சதீஷை ... மேலும் பார்க்க