செய்திகள் :

"முதல்வருக்கான மாண்பை பேண வேண்டும்: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"- திருமாவளவன்!

post image

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில் முதல்வர் விஜய் பேசிய உரை பேசுபொருளானது. இந்த நிலையில், தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விசிக-வின் தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.

திருமாவளவன், விஜய்
திருமாவளவன், விஜய்

இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும். மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

’பாஜகவிடம் தவெக என்றைக்கும் உதவி கேட்டது கிடையாது’ – நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!

கோவை விமான நிலையத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “தி.மு.க-வை பொறுத்தவரை அவர்களின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதன் ... மேலும் பார்க்க

``த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' - காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், இன்று( ஜூன்,24) காலை வழக்கம்போலத் தொடங்கிய மாமன்றக் கூட்டம், யாரும் எதிர்பாராத ஒரு ‘சினிம... மேலும் பார்க்க

அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி... இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

பிரதமர் ராஜினாமா!16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய இங்கிலாந்து, தனது வலிமையான கடற்படை மற்றும் தொழிற்புரட்சியின் துணையோடு 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளைத் த... மேலும் பார்க்க

'விஜய் பிறந்தநாள் விழாவுக்காக 300 பேருந்துகளை காத்திருக்க வைப்பதா?'- அன்புமணி கண்டனம்

"விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை"... மேலும் பார்க்க

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! - கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி - பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.... மேலும் பார்க்க

திருவானைக்காவல்: `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்; என்ன நடந்தது?

திருச்சி, திருவானைக்காவல் அடுத்த அழகிரிபுரம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பார் வசதியோடு செயல்பட்டு வரும் அந்தக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், குறி... மேலும் பார்க்க