செய்திகள் :

காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு – கோவையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்!

post image

கோவை, சுகுணாபுரம் மேற்கு புறவழிச்சாலை அருகே உள்ள மஞ்சிப்பள்ளம் காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

பெண் சடலம் மீட்பு
பெண் சடலம் மீட்பு

அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க கைகளில் பச்சை குத்திய பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்விற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்த பெண் யார்? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: திருமணம் மீறிய உறவில் கணவர்; தட்டிக் கேட்ட மனைவியை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ( 44). தொழிலதிபரான இவர், அப்பகுதியில் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், சாவித்ரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது),(39) என்பவருக்கு... மேலும் பார்க்க

ரூ.17 கோடி அரண்மனை, தனி விமானங்கள்! வருங்கால மனைவியால் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வால் யார்?

புனேவில் மலையேற்றத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட இளம் தொழிலதிபர், அவரது வருங்கால மனைவியால் காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. கோடிக்கணக்கில் செலவ... மேலும் பார்க்க

3 முறை முயன்று, 4வது முயற்சியில் வருங்கால கணவனை கொன்ற இளம்பெண்! - வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

புனேயில் லோஹாகட் கோட்டையில் கேதன் அகர்வால் என்பவர் மலையில் உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கேதனின் வருங்கால மனைவி ஷியா மற்றும் ஷியாவின் காதலன் ஆகியோர் கைது செய்... மேலும் பார்க்க

திருமணத்துக்கு ரூ.17 கோடிக்கு அரண்மனை முன்பதிவு - வருங்கால கணவனை, காதலன் துணையோடு கொன்ற மணப்பெண்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தொழிலதிபர் அகர்வால் மகன் கேதன் அகர்வாலுக்கும், ஷியா கோயல் என்ற பெண்ணிற்கும் இடையே வரும் நவம்பர் மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு மு... மேலும் பார்க்க

தென்னை மரத்தை அகற்றக்கோரி பக்கத்து வீட்டுகாரர் வழக்கு! - பைபிள் வசனம் கூறி தள்ளுபடி செய்த கோர்ட்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கோபிநாத். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாகத்தான் இருந்தனர். ரஞ்சித் வீட்டில் வளர்ந்த... மேலும் பார்க்க

மது + எலி மருந்து: சத்தமே இல்லாமல் 4 மாதத்தில் 8 பேரை கொலை செய்த கொலைகாரன்!

சத்தீஷ்கர் மாநிலம் பலோடபஜார் மாவட்டத்தில் உள்ள கார்வே என்ற கிராமத்தில், துப்பாக்கிச் சூடு, அலறல் அல்லது இரத்தக்களரி இல்லாமல் அடுத்தடுத்து மரணங்கள் நடந்து கொண்டே இருந்தது. பல மாதங்களாக, கார்வேயில் ஆண்க... மேலும் பார்க்க