செய்திகள் :

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

post image

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் கோயம்புத்தூர், மூன்று பேர் சேலம்.

அவர்களில் சேலத்தைச் சேர்ந்த லாரண்யா, அபிநயா மற்றும் தன்ஷிகா ஆகிய மூன்று மாணவிகள் இந்திய அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

இந்த வெற்றிக்குப் பின்னால் கடின உழைப்பும், தொடர்ச்சியான பயிற்சியும் இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். சாஃப்ட் பேஸ்பால் விளையாட்டைப் பற்றி பேசிய தன்ஷிகா, “இந்த விளையாட்டை முதன்முதலில் எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் டீச்சர் அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பயிற்சி எடுத்தோம். சேலத்தைச் சேர்ந்த ராஜு சார் எங்களுக்கு பயிற்சி அளித்தார். ஆரம்பத்தில் இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆனால் பயிற்சி பெற்ற பிறகு இந்த விளையாட்டின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது,” என்றார்.

லாரண்யா கூறுகையில், “எந்தத் துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி அவசியம். இந்த வெற்றிக்காக நாங்கள் பல மாதங்கள் கடுமையாக உழைத்தோம். எங்களது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து ஆதரித்தார்கள். அதுவே எங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது” என்றார்.

இறுதிப்போட்டி குறித்து அபிநயா பேசும்போது, “நேபாள அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டி மிகவும் சவாலானதாக இருந்தது.

இந்திய அணி 91 புள்ளிகள் எடுத்தது. நேபாளம் 86 புள்ளிகள் எடுத்ததால் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினோம். இந்த விளையாட்டை மேலும் பலர் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.

சர்வதேச போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்த மூன்று மாணவிகளின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை. இலங்கையில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்காக தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கு ஆசிய அளவில் தங்கம் வென்றுள்ளோம். அடுத்ததாக உலக அரங்கிலும் இந்தியாவின் கொடியை உயரப் பறக்கச் செய்வோம் என மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

FIFA: ஃபிஃபாவின் புதிய மரபு; இரண்டு அரிய அடையாளங்களுடன் களமிறங்கிய லூகா மோட்ரிச்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் 'Group L' பிரிவின் ஆரம்பச் சுற்று ஆட்டத்தில், உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆட்டம் தொடங... மேலும் பார்க்க

தீப்தி சர்மா நிகழ்த்திய சம்பவம்; பாகிஸ்தானை பந்தாடிய இந்திய பெண்கள் அணி!

இங்கிலாந்தில் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா. குரூப் A, குரூப் B என மொத்தம் 12 அணிகள் களம் காணும் இந்தத் தொடரில், ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கையோடு இருபது ... மேலும் பார்க்க

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க