செய்திகள் :

மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்யவந்த நீதிமன்ற பணியாளர்கள் – காரணம் என்ன?

post image

 மதுரை மாவட்டம், உத்தங்குடி நீதிமன்றம் அருகேயுள்ள அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் ட்ரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலமானது, கடந்த 2004-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் கையகப்படுத்தபட்டது. ஆனால் இந்த நிலத்திற்கு 2022-ம் ஆண்டு வரையில் இழப்பீடு தொகையான 2 கோடியே 42 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை.

இதனால் மனுதாரர் லெட்சுமணன் தரப்பில் மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், `மதுரை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை நில கையகப்படுத்தல் பிரிவு மாவட்ட வருவாய் மற்றும்  தேசிய நெடுஞ்சாலை, நில கையகப்படுத்தும் அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு இழப்பீட்டு் தொகை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.

 நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மனுதாரருக்கான மூன்றரை கோடி அளவிற்கான இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கார் உள்ளிட்ட 13 கார்கள், நூறு கணினிகள், 20 லேப்டாப்கள், 200 பீரோக்கள், 200 நாற்காலிகள், ஜெராக்ஸ் பிரிண்டர் , ஏசி உள்ளிட்டவற்றை ஜப்தி செய்வதற்காக மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரின் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர்  மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட அசையா பொருள்களை ஜப்தி செய்ய சென்றனர். பின்னர் மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

இடைத்தேர்தலுக்குத் தயாராகும் ஈரோடு, திருப்பூர்; மீண்டும் களமிறங்கும் அலுவலர்கள்!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு ... மேலும் பார்க்க

`தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு' - மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஏப்ரல் 8-ம் தேதி நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்போது அமலில் இருந்ததால், அப்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்ஸை மாற்றிவ... மேலும் பார்க்க

பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடற்கரையானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும்.இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் 'புகார் நகரமாகப்' பெரும்பங்கு வகிக்... மேலும் பார்க்க

தவெக ஆட்சி: "38 நாள், 150 போக்சோ வழக்குகள், 126 பாலியல் குற்ற வழக்குகள்" - இபிஎஸ் கடும் விமர்சனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இத்தேர்த... மேலும் பார்க்க

"தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாக இருக்க வேண்டும்; தேசிய கீதம் பாடுவதில் முரண் கிடையாது!" - ராஜ்மோகன்

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இத்தேர்த... மேலும் பார்க்க

`தலைவர்களின் பெயர்கள் தவறாக உச்சரிப்பு' - மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியிருக்கிறது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது.... மேலும் பார்க்க