செய்திகள் :

``என் இறுதி மூச்சு வரை தவெக-வில் பயணிப்பேன்" - விஜய் உடன் இணைந்த மன்சூர் அலிகான் உருக்கம்!

post image

பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரருமான தவெக-வின் விளையாட்டு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் மூத்த, பலம்பெரும் தலைவர்களின் முன்னிலையில் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த இயக்கத்தோடுதான் என் பயணம் தொடரும்.

மன்சூர் அலிகான்

நான் தவெக-வில் இணைய வருகிறேனா என்று பலரும் கேட்கிறார்கள். 'பிரிந்திருந்தால் தானே மீண்டும் இணைவதற்கு?'. தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, 'லியோ' திரைப்பட வெற்றி விழாவில், நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து, 'தமிழகத்தின் ஒரே மாற்றுத் திறவுகோல், நாளைய தீர்ப்பு விஜய் தான்' என்று நான் அன்றே பிரகடனப்படுத்தியவன். சூழ்நிலை காரணமாக தற்போது தலைவரை (விஜய்) நேரில் சந்திக்க இயலவில்லை.

இன்னும் ஓரிரு நாள்களில் அவரை நேரில் சந்திப்பேன். நாளைய தமிழகம், இன்றைய தமிழகம் என எப்போதும் தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், ஆண்டாண்டு காலம் வெற்றியை நோக்கி நடைபோடவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். தமிழக அரசியலில் நிச்சயமாக மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்" என்றார்.

IUML: ``அப்படி நீங்களா கற்பனை பண்ணிகிட்டா எப்படி பாய்" - திமுக-வுடன் உறவை முறித்த காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில், சென்னையில் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 483 பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற... மேலும் பார்க்க

`நேரலை துண்டிப்பு; பள்ளிகளில் அரசியல் தலைவர் படங்கள்' - அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன பதில் என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு அ... மேலும் பார்க்க

`உங்களால் ஒரு இடத்தைக் கூட பெற முடியவில்லையே.!' - அண்ணாமலைக்கு எதிராக காட்டமான தமிழிசை | பேட்டி

முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நம் கேள்விகளை முன் வைத்தோம்... இனி கேள்விகளும் அதற்கு தமிழிசை சவுந்தரராஜனின் பதில்களும்..!``தேர்தலில் பா.ஜ.க-வின் த... மேலும் பார்க்க

நேரலை துண்டிப்பு; 'சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் மாற்றமா?' - உதயநிதி கடிதம்

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் நேற்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான... மேலும் பார்க்க

`கடன் நெருக்கடி; மன உளைச்சல்' - தீவிர திமுக விசுவாசியான அசோக்குமார் MLA தவெகவில் இணைகிறாரா?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமார். இவர் தவெக-வில் இணைய இருப்பதாக பேசப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்களது எ... மேலும் பார்க்க

`மாநகராட்சியே நாசமா போச்சு’ | சாயம் வெளுத்த மேயர், துணை மேயர்; வேலூர் திமுக-வில் மோதல்!

வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சொதப்பல்களால் பல்வேறு பணிகளில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் குவிகின்றன. குறிப்பாக, `மாநகராட்சியைக் கபளீகரம் செய்துவிட்டார்’ என்று தி.மு.க-வைச் சேர்ந்த பெண் மே... மேலும் பார்க்க