செய்திகள் :

"அந்தப் படத்தில் கேப்டனுக்காக வாக்கு கேட்டேன், இன்னைக்கு அவரோட மகனுக்காக.!"- நினைவுகூர்ந்த ஸ்டாலின்

post image

விருதுநகர் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்.33) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது விஜயகாந்தை நினைவு கூர்ந்த ஸ்டாலின், "கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்காக நான் வாக்கு கேட்கும்போது என் நினைவுகள் எல்லாம் எங்கே செல்கிறது தெரியுமா?

விஜய பிரபாகரன்

அவரது தந்தை, என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில் வேட்பாளராக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் வருவேன்.

அதில் வேட்பாளராக இருக்கக்கூடிய விஜயகாந்தை ஆதரித்து நான் பாடுவேன். அந்தப் பாட்டு கலைஞர் எழுதிய பாட்டுதான். கேப்டனுக்கு படத்தில் வாக்கு கேட்டேன் இன்று அவரது மகனுக்கு வாக்கு கேட்கிறேன். விஜய பிரபாகரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றிருக்கிறார்.

அதே பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஸ்டாலின், " பாகுபலி திரைப்படத்தில் விசுவாசத்திற்கு கட்டப்பா எப்படியோ, துரோகத்திற்கு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிதான்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பழனிசாமி செய்த துரோகத்தை நம்மால் எண்ண முடியாது. ஆனால், அவரின் தோல்வியை எண்ணிடலாம். பழனிசாமி சொல்லும் பொய்களை புத்தகமே போடலாம். சங்கிக் கூட்டத்தில் சேர்ந்ததால் அவர்களைப் போல வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார்" என்று விமர்சித்திருக்கிறார்.

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க