செய்திகள் :

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: ``உனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டாய்'' - வாழ்த்திய பாவனா

post image

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று (நவ.28) திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியும், தொகுப்பாளருமான பாவனா திருமண வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்
அனிருத்தா - சம்யுக்தா திருமணம்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அன்புள்ள சம்யுக்தா... உன்னுடைய இதயம் மிக வலுவாக இருக்கிறது. கஷ்டமான காலங்களையும் கடந்து செல்லும் பலம் உன்னிடம் இருக்கிறது.

இந்தத் திருமண நாளில் உனது முகத்தில் சிரிப்பு, பூரிப்பை பார்க்கிறேன். அதைவிட முக்கியமாக உன்னுடைய மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.

இறுதியாக உனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டாய். அனிருத்தாவிடம் உனக்கான நிரந்தர இடத்தை அடைந்துவிட்டாய். உன்னுடைய மனது எதற்கெல்லாம் இத்தனை வருடங்களில் ஏங்கியதோ அதெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அனிருத்தா - சம்யுக்தா திருமணத்தில்...
அனிருத்தா - சம்யுக்தா திருமணத்தில்...

அதேபோல், அனிருத்தா உன்னுடைய வீட்டின் நிரந்தர பிக்பாஸ் (சம்யுக்தா) யாரென்று உனக்கே தெரியும். புதிய இன்னிங்ஸை தொடங்குவதற்கு வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

BB Tamil 9: "பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு எனக்கு தோணுது"- திவ்யா குறித்து சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்... மேலும் பார்க்க

BB Tamil 9: மவுன்ட் ரோடு விளம்பரம், முக்கோண லவ் ட்ராக்.. எஃப்.ஜே. எவிக்ஷனில் தப்புவ‌து எப்படி?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விஜய் டிவியில் 60 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் நான்கு வாரங்கள்தான் மிச்சமிருக்கிற சூழலில் அந்த வீட்டுக்குள் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.முன்னதாக இந்த சீசன் இரு... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 70: சண்டை சான்ட்ரா; மகுடி ஊதும் பாரு - இந்த `குட் காம்பினேஷன்' தொடருமா?

‘டாஸ்குகளை நீங்கதான் யோசிச்சு சுவாரசியமா செய்யணும். யாரும் சொல்லித் தர முடியாது’ என்கிறார் ஹோஸ்ட். ஆனால் ஒரு டாஸ்க் முடிந்த பிறகு ‘ஏன் அப்படி செஞ்சீங்க?’ என்று வார இறுதியில் கேட்டு குடாய்கிறார்.கோர்ட்... மேலும் பார்க்க

BB Tamil 9: இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றவர்கள் யார் யார்? - வெளியான புரொமோ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடந்திருக்கிறது. BB Tami... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 69: ‘கேக்கல... சத்தமா... கேக்கல.. ‘ - பிகில் விஜய்யாக மாறிய விசே

மறுபடியும் அதேதான் ‘இவரே பாம் வைப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற மாதிரிதான் பிக் பாஸ் ஷோ போய்க்கொண்டிருக்கிறது. பாரு, கம்ருதீன் போன்ற அடாவடி போட்டியாளர்களின் சேட்டைகளை, அதனால் ஏற்படும் சண்ட... மேலும் பார்க்க