செய்திகள் :

"அன்புமணியும், எடப்பாடியும் இதோட இரண்டு பேரும் நிறுத்திகோங்க.!"- பிரேமலதா விஜயகாந்த் எச்சரிகை

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அநாகரிக பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (மார்ச்.4) பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”நாம் எவ்வளவு கண்ணியத்தோடு நடந்து கொள்கிறோம். பிரசாரத்திற்கு வந்தால் தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச வேண்டும்.

அதை விட்டுவிட்டு குடும்பத்தை இழுத்து கண்ணியக் குறைவாக பேசினால், போளூர் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உங்களை அடித்து விரட்டுவார்கள்.

இதில் மாற்றுக் கருத்து கிடையாது. உங்களைப் பற்றி நாங்கள் பேசியது கிடையாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்?

இங்கு தேர்தல் வருவது எதற்காக? எல்லா குடும்பத்தையும் திட்டுவதற்காகவா தேர்தல் வருகிறது? உங்களால் முடிந்தால் வந்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.

லஞ்ச வழக்குகள், ஊழல் வழக்குகளை வைத்துக்கொண்டு டெல்லிக்கு போய் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறீர்கள்.

உங்களுக்கு பேச எந்த தகுதியும் இல்லை, எந்த தார்மீக உரிமையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எந்த சாதியும் இல்லை, மதமும் இல்லை. எல்லோரும் ஒரே அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி என்று கேப்டன் சொல்லி எங்களை வழிநடத்தினார்.

அன்புமணி, எடப்பாடி பழனிசாமி
அன்புமணி, எடப்பாடி பழனிசாமி

அதனால், இன்று சாதி கட்சியை வைத்துக்கொண்டு நீங்கள் தேவையில்லாமல் சாதி மற்றும் குடும்பத்தை பற்றி பேசினால், அப்புறம் நாங்கள் பேச ஆரம்பித்தால் உங்கள் முகத்தை எங்கே வைத்துகொள்வீர்கள் என்று தெரியாது.

இருவரும் இச்செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மரியாதையுடன் தெரிவிக்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமியையும், அன்புமணியையும் பிரேமலதா விஜயகாந்த் சாடியிருக்கிறார்.

“முதல்வர் வாகனம் முன்னே... செய்தி துறை வாகனம் பின்னே!” - செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு ப... மேலும் பார்க்க

`இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்' - பழைய நினைவில் பேசிய செங்கோட்டையன்; சட்டென சுதாரிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க - வின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், பவான... மேலும் பார்க்க

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க