திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலையழகும் புராண சிறப்பும...
"அப்போது பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் அவர்" - உதயநிதி தாக்கு
முதல்வர் விஜய் குறித்து தவறாகப் பேசியதற்காக நேற்று கைது செய்யப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று இரவே விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.
பிறகு சென்னைக்கு வந்தவர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். திருச்சி விமான நிலையத்திலேயே தவெக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தவர், கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் இப்போது வெளியிட்டிருக்கிறார்.

அவர், "விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற சோஃபா மாடல் அரசு, பிரச்னைகளைத் திசைதிருப்புவதற்காக என்னைக் கைது செய்திருக்கிறது. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப் பதிவு செய்து சென்னையிலிருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள். என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமெடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்துப் பயந்து ஓடிப்போய்விடவில்லை. ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர். முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்குப் பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன். விவசாயிகளுக்காகப் போராடிக் கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூடக் கைதாவேன். விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோமீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத் தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது. என்னுடைய கைதைக் கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.















