செய்திகள் :

அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!

post image

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது.

அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

நேற்றும் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக் குறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, "நேற்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பிற நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்
ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்

அதில் கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மற்றொரு கட்டத் தகவல் தொடர்புகளும் விளக்கங்களும் நடந்தன.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், ராஜதந்திரத்தை மீண்டும் முன்னெடுப்பதற்காக ஈரானின் நிலைப்பாடுகளும் நிபந்தனைகளும் அமெரிக்கத் தரப்பிற்குத் தெரிவிக்கப்பட்டன.

எந்தவொரு தரப்பிற்கும் எவ்வித சந்தேகமோ, குழப்பமோ, சாக்குபோக்குகளோ அல்லது காரணங்களோ எஞ்சியிருக்காத வகையில் இந்த தகவல்கள் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டன.

ஈரானின் நிபந்தனைகள் மிகவும் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை. கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதார பயங்கரவாதம் உள்ளிட்ட அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். முடக்கப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.

இரு கடலோர அரசாங்கங்களுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையை ஏற்க வேண்டும் மற்றும்..." என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" - காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவர... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜ... மேலும் பார்க்க

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் பு... மேலும் பார்க்க

"நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் வேளாண் அமைச்சர் ஆக்குகிறோம் என்றார்" - யாரைச் சொல்கிறார் சீமான்?

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்.23) தேர்தல் பிரசாரம் செய்திருந்தார் சீமான்.அப்போது பேசிய அவர், "என்ன நடக்குது இப்போ?... மேலும் பார்க்க

``ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" - அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei)கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச... மேலும் பார்க்க

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி... தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)(ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி)கட்டுரையாளர் : எம... மேலும் பார்க்க