செய்திகள் :

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

post image

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, நிலத்தை விற்க முயன்ற தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை நிர்​வாகி​களில் ஒரு​வரு​மான முருகதாஸ்  மற்றும் வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய முருகதாஸ் விழுப்​புரம் காம​ராஜர் நகரில் வசித்து வருகிறார். அவரை விசாரணை செய்வதற்காக கடந்த 18 ஆம் தேதி சிபிசிஐடி போலீ​ஸார் சென்றனர்.

அப்போது அவருடைய வீட்டில் யாருமில்லாமல் வீடு பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து  பூட்​டி​யிருந்த வீட்​டின் கதவையும் உள்ளே இருந்த பீரோவை​யும் உடைத்​து, அதிலிருந்த சில முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றினர். பின்​னர் வீட்​டுக்கு சீல் வைத்​து​விட்டு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில் முரு​க​தாஸ் மற்​றும் அவரது மனைவி லீலா ஆகியோர் நேற்று விழுப்​புரம் சிபிசிஐடி போலீ​ஸாரிடம் சாவியை பெற்று வீட்டை திறந்​தனர்.

கார்பார்க்கிங்காக உள்ள கோவில் நிலம்

தொடர்ந்து முருகதாஸின் மனைவி லீலா கூறிய​தாவது, "பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்தை எனது மாமா நிர்​வகித்து வந்​தார். அவர் தற்​போது உயிருடன் இல்​லை. மடத்​துக்குச் சொந்​த​மான இடம் தான​மாக வழங்​கப்​பட்​டது​தான். திரு​வா​மாத்​தூரில் உள்ள கவு​மார மடால​யத்தை விஸ்தரிப்பு செய்​வதற்​காக, பழநி​யில் உள்ள மடத்து சொத்தை விற்​பனை செய்ய முடிவு செய்​தோம்.

எங்​களை வழக்​கறிஞர் ஒரு​வர் அணுகி​னார். ரூ.2 கோடி தரு​வ​தாக தெரி​வித்​தார். அவரது பேச்சை நம்​பி, எனது கணவர் முரு​க​தாஸ் கையொப்​பமிட்​டார்.

ஆனால் எங்​களுக்கு பணம் கொடுக்​க​வில்​லை. வழக்​கறிஞருடன் நடத்​திய அனைத்து உரை​யாடல்​களுக்​கும் ஆதா​ரம் உள்​ளது. முறை​கே​டாக பத்​திரப்​ப​திவு என்​பது தெரி​யாது. இந்த வழக்​கில் எனது கணவர் பெயரை​யும் இணைத்​துள்​ள​தால் சிபிசிஐடி விசா​ரணைக்கு நானும், எனது கணவர் முரு​க​தாஸும் திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​துக்கு கடந்த 18-ம் தேதி சென்​றோம்.நாங்​கள் உள்பட மடத்​துடன் தொடர்புடைய 7 பேர் ஆஜரானார்கள்.

பழனி
பழனி

2 நாட்​களாக விசா​ரணை நடத்​தி​விட்டு பின்னர் எங்களை விடு​வித்​தனர். எனது கணவர் முரு​க​தாஸ், திரு​வெண்​ணெய்​நல்​லூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்​ளி​யில் முதுகலை தமிழ் ஆசிரிய​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

இதனால் அவர் வழக்​கம்​போல் பணிக்​குச் சென்​றுள்​ளார். அதற்​குள் நாங்​கள் தலைமறை​வாகி​விட்​ட​தாக தவறான தகவலை சமூக வலை​தளத்​தில் பரப்பி வருகின்றனர். நாங்​கள் எந்த தவறும் செய்​ய​வில்​லை. தலைமறைவாக​வும் இல்​லை. அழைக்​கும்​போது விசா​ரணைக்கு ஆஜராவோம். இந்​துசமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷுக்​கும் எங்​களுக்​கும் எந்தத் தொடர்​பும் இல்​லை. எங்​கள் வீட்​டில் இருந்துகவு​மார மடால​யத்​தின் சொத்து பத்​திரங்​கள், வங்கி கணக்கு புத்​தகங்​கள் உள்​ளிட்​ட​வற்றை போலீ​ஸார் கைப்​பற்றி இருக்​கின்​றனர்" என்றார்.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க