செய்திகள் :

'அமைச்சர் ஆனந்த் அறையில் தொங்கும் சிவப்பு துணி!' - பின்னணி என்ன?

post image

தலைமைச் செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தின் அறை வாசற் கதவின் மேல் கடந்த சில நாள்களாக ஒரு சிவப்புத்துணி தொங்கிக் கொண்டிருக்கிறது. எதற்காக அந்த துணி வாயிற் கதவில் மாட்டப்பட்டிருக்கிறது என அமைச்சரின் அறைக்கு வரும் மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர். அந்த சிவப்புத் துணியின் ரகசியம் என்ன?

ஆனந்த்
ஆனந்த்

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் கைகுலுக்கும் திமுக - அதிமுக உறுப்பினர்கள்...மந்திரி அறையில் மந்தரித்த துணி - சட்டமன்ற வளாக கலகலப்புகள்' என ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அதில் மந்திரியின் அறையில் தொங்கும் அந்த சிவப்புத் துணி பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

இதழ் வெளியான நிலையில் அமைச்சரின் அறையில் தொங்கும் அந்த சிவப்புத் துணி புகைப்படமாகவும் வீடியோவாகவும் இணையத்தில் பரவி வருகிறது.

அமைச்சரின் அறையில் திடீரென தொங்கும் அந்த சிவப்புத்துணியை பற்றி அமைச்சருக்கு நெருக்கமான கோட்டை வட்டாரத்தினர் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ``அமைச்சர் ஆனந்துக்கு கடவுள் பக்தி அதிகம். எந்தவொரு முக்கியமான காரியத்தை செய்வதற்கு முன்பும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு போய் வணங்கிவிட்டுதான் வேலையை தொடங்குவார்.

சிவப்புத் துணி
சிவப்புத் துணி

அந்த கோயில்தான் அவருக்கு மனதுக்கு நெருக்கமான இடம். தவெகவின் வேட்பாளர் பட்டியலையும்கூட அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்துவிட்டுதான் தலைவரிடமே கொடுத்தார். சமீபமாக அமைச்சரின் நீர்வளத்துறை சார்ந்த பிரச்னைகள் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவிரி, மேகதாது என உள்ளூர் எதிர்க்கட்சி தொடங்கி பக்கத்து மாநில ஆளுங்கட்சி வரை விமர்சிக்கிறார்கள். அவையிலும் அமைச்சரின் துறையை எதிர்க்கட்சியினர் அடித்து வெளுக்கின்றனர். இந்த சிக்கல்களெல்லாம் தீர வேண்டும் என்பதற்காக அவரின் இஷ்ட கோயிலில் வேண்டி சிறப்பு பூஜை செய்து சிவப்புத் துணியை வாங்கி வந்து மாட்டியிருப்பார்" என கிசுகிசுக்கின்றனர்.

'அமெரிக்காவை Scam செய்கிறது இந்தியா' - வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு; செக் வைக்க ட்ரம்பின் புது ரூட்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய தலைவலி - 'வரி'. அமெரிக்காவை உலக நாடுகள் ஏமாற்றி, அதிக வரிகள் வசூலிக்கின்றன. அதனால், அந்த நாடுகள் மீது அதிக வரிகள... மேலும் பார்க்க

`முதல்வர் அறையை நவீனமாக மாற்றுகிறார்; அவர் நடிகர் ஆடம்பரமாக தான் இருப்பார்'- எடப்பாடி பழனிசாமி சாடல்

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக தவெக அரசைக் கண்டித்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க

``அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது..!" - மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களை சாடிய ஆர்.எஸ் பாரதி

சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் புகழ் வணக்க பொதுக்கூட்டத்தில் திமுக ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், "சைதாப்பேட்டை தொகுதிக்கு மா.சுப்ரமணியன் மாதிரி யாரும் செ... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணி ஆப்சென்ட்; ``சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா?" - எடப்பாடி கமென்ட்!

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாக தவெக அரசைக் கண்டித்தும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழ... மேலும் பார்க்க

காவிரி விவகாரம்: "தவெக மட்டும் இதை செய்தால், அதுதான் நேஷனல் செய்தி!" - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தமிழ்நாடு என்பது பொதுவானது. முதலமைச்சர் என்பவர் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பெற்றவர். சமீபத்தில் கூட ... மேலும் பார்க்க

Eye Scan: வடகிழக்கு மக்களின் சவால்; நகைச்சுவையாக நாகாலாந்து அமைச்சர் சுட்டிக்காட்டிய முக்கிய பிரச்னை

வடகிழக்கு இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதில் நாகாலாந்து சுற்றுலா மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலங் புகழ்பெற்றவர... மேலும் பார்க்க