செய்திகள் :

`அரசாங்கத்திற்கு ஆயுதம் தயாரிக்க உதவி செய்யுங்கள்!' - General Motors, Ford-ஐ கேட்கும் ட்ரம்ப் & கோ

post image

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி... ஈரான் மீது தாக்குதல் ஆகிய காரணங்களால் அமெரிக்காவின் ஆயுத இருப்பு குறைந்துள்ளது.

இதைச் சரிசெய்ய ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் பேசியுள்ளது, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம்.

அதாவது இந்த நிறுவனங்கள் வாகன உற்பத்தியைத் தாண்டி, தங்களது உற்பத்திச் சாலைகளில் அமெரிக்காவின் ஆயுதங்கள் உற்பத்திக்கு உதவி செய்ய முடியுமா என்கிற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்காவின் செய்தி நிறுவனமான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஏன் இந்த யோசனை?

ஒருவேளை போர் சூழல் நீடித்தால், இனி புதிதாக ஒரு போர் தொடங்கினால், அதற்கு அமெரிக்காவிற்கு நிறைய ஆயுதங்கள் தேவைப்படும். இதைச் சமாளிக்கவே அமெரிக்காவிற்கு இந்த யோசனை.

இந்தப் பேச்சுவார்த்தை ஈரான் போருக்கு முன்னரே தொடங்கிவிட்டதாம். ஆனால், ஈரான் போர் தற்போதும் நீடித்து வருவதால், இந்தப் பேச்சுவார்த்தை இப்போது அவசரக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் புதிய யோசனை படி, வாகன நிறுவனங்கள் முழுமையான ஆயுதங்களைத் தயாரிக்காது. வழக்கமான, ஆயுத உற்பத்தியாளர்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை சில விமான நிறுவனங்களுடனும் நடக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

TVK: "அவதூறுகளால் என்னை முடக்க முடியாது" - ஆர்.கே. நகர் தவெக வேட்பாளர் மரியவில்சன் பேட்டி

2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆர்.கே.நகர் த.வெ.க வேட்பாளர் மரியவில்சன் அத்தொகுதி மக்களுக்கு ஏராளனமான வாக்குறுதிகளை அளித்து கவனம் ஈர்த்து வருகிறார். இன்னொருபுறம், அவர்... மேலும் பார்க்க

''போதைப்பொருட்களை ஒழிப்பதே என் லட்சியம்'' - ‘சென்னை’ அமைச்சரின் கோட்டையைச் சரிப்பாரா இளைஞர் யுவராஜா?

ஈரோடு மேற்குத் தொகுதி இப்போது வெறும் தேர்தல் களம் மட்டுமல்ல; ஒரு பெரும் அரசியல் சதுரங்கம். ஒருபுறம் ஆளுங்கட்சியின் அதிகார பலம், மறுபுறம் 'ஈரோட்டு காமராஜரின்' பேரன் எனப் பாரம்பர்யப் பின்னணி கொண்ட எம்.ய... மேலும் பார்க்க

மதுரை வடக்கு தொகுதி: வெற்றி வாகைசூடும் திமுக; திட்டங்களைப் பட்டியலிடும் தளபதி!

‘‘உதயசூரியன் களம் காணும் 175 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு இப்போதே உறுதி என்று கணிக்கப்படும் பட்டியலில் மதுரை வடக்கு தொகுதியும் ஒன்று'' என உறுதியாகச் சொல்கிறார்கள் மதுரை மக்கள். திமுக வேட்பாளர் கோ.தளபத... மேலும் பார்க்க

`வந்து கெஞ்சி கண்ணீர் விட்டார்; மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன்!' - செங்கோட்டையனைச் சாடிய இபிஎஸ்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி தலை... மேலும் பார்க்க

தமிழையோ, தமிழ் கலாசாரத்தையோ பாஜக, ஆர்.எஸ்.எஸ் தொடக்கூட முடியாது - ராகுல் காந்தியின் 6 வாக்குறுதிகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாள்கள் தான் உள்ளன. தேர்தல் பிரசாரத்திற்காக திருவள்ளூரில் உள்ள பொன்னேரிக்கு வந்திருக்கிறார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. தேர்தல் பிரசாரத்தில் ராக... மேலும் பார்க்க