"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர்...
அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுச் சேர்க்கலாம்?
அரசு வேலை என்றாலே கவலை இல்லாத வேலை என்றுதான் நினைத்தது ஒரு காலம். காரணம், நிலையான வேலை, கை நிறைய சம்பளம் என்பது போக, ஆயுள் முழுக்க பென்ஷனும் கிடைக்கும் என்கிற காரணங்களால் அனைவரும் அரசு வேலை வேண்டும் என்று தேடித் தேடி சேர்ந்து வந்தனர்.
ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர பென்ஷன் கிடைப்பதில்லை. நியூ பென்ஷன் என்று சொல்லப்படும் என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து நாம் சேர்த்து வைக்கும் பணத்தில் இருந்துதான் நமக்கான ஓய்வூதியத்தை எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த நிலையில், என்.பி.எஸ் மூலம் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு ஊதியம் என்பது தற்போது குறைந்த அளவிலேயே இருக்கிறது. அப்படியானால், உங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை அதிக அளவில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
அரசு ஊழியர்கள் என்.பி.எஸ் மூலம் சேர்க்கும் பணம் குறைவாக இருந்தாலும், அவர்கள் ஓய்வு பெறும்போது கணிசமான பணம் கிடைக்கவே செய்கிறது. இந்தப் பணத்தை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் இன்றைக்கு முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.

அரசு ஊழியர்கள் ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் பணத்தைப் பெரும்பாலும் வங்கி எஃப்.டி.யில் போட்டு வைக்கிறார்கள். காரணம், வங்கி என்பது அவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. ஆனால், வங்கி அல்லது தபால் அலுவலகம் எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானமானது அதிகபட்சம் 8.50% என்கிற அளவில்தான் இருக்கிறது. இந்தப் பணத்துக்குக் கிடைக்கும் லாபத்துக்கு வரி கட்டியது போக மீதம் கிடைக்கும் பணத்தைக் கணக்குப் போட்டு பார்த்தால், அது பணவீக்கம் என்கிற அளவில்தான் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வங்கி அல்லது தபால் அலுவலக எஃப்.டி மூலம் கிடைக்கும் லாபம் நீண்ட கால நோக்கில் பெருகுவதும் இல்லை; குறைவதும் இல்லை. இது நீண்ட கால நோக்கில் சரியல்ல.
அரசு ஊழியர்கள் ஓய்வுக் காலத்துக்கான நிதித் திட்டமிடலை எப்படி செய்வது, ஓய்வுக் காலத்தில் கிடைக்கும் பணத்தை எங்கே, எப்படி முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பது, சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் (SWP) என்றால் என்ன, அதை எப்படி செய்வது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆன்லைன் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.
டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரீஜினல் ஹெட் மில்லட் பாபின் இந்த மீட்டிங்கில் அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்கும் வழிகள் பற்றிப் பேச இருக்கிறார்.

இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், இந்த லிங்க்கினை சொடுக்கி https://labham.money/webinar-nov-26-2025? tm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov26_2025 உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையான லிங்க் அனுப்பப்படும்.
உங்கள் கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்!
ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!




















