செய்திகள் :

“அவங்க விரும்பிய மகன் Gemini தான்”- அம்மாவின் AI உரையாடலைப் பகிர்ந்து நெகிழ்ந்த மகன்! Viral Video

post image

“WhatsApp-ல Status எப்படி வைப்பது?” என்று அம்மா கேட்க... பக்கத்தில் மகன் இருந்திருந்தால், “இதை இப்படிப் பண்ணுங்கம்மா” என்று சொல்லியிருப்பார். ஆனால், இங்கே அம்மாவுக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு AI!

AI chatbot-ஆன Gemini-யிடம், WhatsApp-ல் Status வைப்பது எப்படி என்று ஒரு பெண் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த வீடியோவை Instagram பயனர் மோஹித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில், தனது அம்மா Gemini-யிடம் WhatsApp-ஐ எப்படி திறப்பது என்று கேட்கிறார். உடனே Gemini, திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் Search option-ஐ பயன்படுத்தி WhatsApp என Type செய்யச் சொல்கிறது.

WhatsApp திறந்ததும் அடுத்தடுத்த வழிமுறைகளையும் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்கிறது. முதலில் Updates பகுதிக்குச் செல்ல வேண்டும். பின்னர் புதிய Status பதிவிடுவதற்காக “Add status” அல்லது Camera/Pencil icon-ஐ அழுத்த வேண்டும் என விளக்குகிறது.

அம்மா Pencil option-ஐ தேர்வு செய்ததும், Gallery-யிலிருந்து புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, Green Arrow-ஐ அழுத்தி Status-ஆக பதிவிடச் சொல்கிறது.

ஒருவழியாக Status பதிவாகிவிட்டது! அதைக் கேட்ட Gemini, “நீங்கள் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்” எனப் பாராட்டுகிறது.

இதைப் பார்த்த மோஹித் சர்மா, “அவங்க விரும்பிய மகன் Gemini தான்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “சிறிய விஷயங்களில் கிடைக்கும் மகிழ்ச்சி மிகவும் அழகாக இருக்கிறது” எனப் பாராட்டி வருகின்றனர்.

`பேய், தற்கொலை, மாயம்'-மாணவி பாலியல் வன்கொடுமை வதந்தி; நள்ளிரவில் சூறையாடப்பட்ட பல்கலைக்கழகம்!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU), மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக எழுந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து மா... மேலும் பார்க்க

'அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பிறகு மீண்டும் போர்?' ஈரானின் 7 நிபந்தனைகளை நிராகரித்த டொனால்டு ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடத்திய தாக்குதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பல... மேலும் பார்க்க

'பெங்களூரு வரும் MLA-க்கள் இருதிருமணம் செய்து கொள்கிறார்கள்' - முதல்வர் சிவ்குமார் சர்ச்சை பேச்சு

பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து சட்டப்பேரவையில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் சட்டமன்றத்தில்,''பெங்களூரு வரும் மக்கள் பெங்கள... மேலும் பார்க்க

ரூ.10 கோடி வாடகை; நடிகர் அஜய் தேவ்கன் வீட்டில் சலூன் கட்டுமான பணி - நிறுத்திய மாநகராட்சி நிர்வாகம்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மும்பை ஜுகுவில் உள்ள கபோல் ஹவுசிங் சொசைட்டி பங்களாவில் வசித்து வருகிறார். இது 7802 சதுர அடி கொண்டது ஆகும். எனவே தனது பங்களாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வாடகைக்கு விட அஜய் ... மேலும் பார்க்க

“First சாக்லேட் ... Next ஐபோன்” - ஊழியர்களுக்கு பரிசளித்து நெகிழ வைத்த UAE நிறுவனம்!

“எனக்கும் அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா?”... சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவைப் பார்த்த பிறகு, பலரும் கேட்கும் கேள்வி இதுதான். காரணம், UAE-யின் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதன் நிர்வாகம் வழங... மேலும் பார்க்க

118 சவரன் நகை கொள்ளை... வீடியோவால் வந்த வினை? - நகைகளை காண்பித்த பெண் யூடியூபர் வீட்டில் அதிர்ச்சி!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தம்மத்துகோணம் பகுதியில் அமைந்துள்ள வி.ஐ.பி கார்டனில் வசித்துவருபவர் வினோத்குமார். இவர் கிராம்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் ஒரு... மேலும் பார்க்க