செய்திகள் :

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" - சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

post image

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றார்.

'இது சுமூக பேச்சுவார்த்தைக்கான முயற்சியோ' என்று அரசியல் களத்தில் பேச்சு ஒன்று எழுந்தது. இதற்கு வைகோவே பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் காம்ரேட் பேபி மாநிலங்களவையில் எனக்கு சக உறுப்பினர் மட்டுமல்ல.

என் மீது எல்லையற்ற வாஞ்சையும், அன்பும் கொண்டிருப்பவர்.

M A பேபி
M A பேபி

அண்மையில் நான் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். நாடாளுமன்ற இரு அவைகளிலும் நான் ஆற்றிய ஆங்கில உரைகளைத் தொகுத்து அதற்கு அணிந்துரை வழங்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தேன்.

அப்போது விமான நிலையத்திற்கே தொழிற்சங்கத் தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினரையும் அனுப்பி, நானும், என்னோடு வந்தவர்களும் அரசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார் பேபி.

ஒற்றுமை

எனக்கும், அவருக்கும் ஒரு ஒற்றுமை. பழைய பாடல்களைக் கேட்பது எனக்கும், அவருக்கும் பொழுதுபோக்கு.

இப்போது கூட, அவருடன் உணவருந்தும் போது, பாசமலர், திருவிளையாடல், பாவ மன்னிப்பு போன்ற திரைப்படங்களின் பாடல்களைக் கேட்டோம்.

'செம்மீன் பாடல்களைக் கேட்போம்' என்று கூறினேன். அதையும் கேட்டோம். எங்கள் இருவருக்கிடையில் அப்படிப்பட்ட நட்பு.

அதனால், அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை தொலைகாட்சியில் பார்த்தேன். உடனே புறப்பட்டு வந்தேன்.

வைகோ
வைகோ

அவர்கள் முக்கியமான கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவரைச் சந்திக்க வந்தேன்.

தேர்தலுக்குப் பிறகு இங்கு வரும்போது, வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்று அழைத்தேன். அதன் பின், அவர் கூட்டத்திற்குச் சென்றுவிட்டார். இதுதான் நடந்தது. இதைத் தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்திற்குள் எந்த அரசியலையும் பேசமாட்டேன்"

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" - ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் ... மேலும் பார்க்க

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செ... மேலும் பார்க்க

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க வரும் பெண்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாகவும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். தன்னை ஓய்வு பெற்ற ... மேலும் பார்க்க

"விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும்" - திருமா

திமுக கூட்டணி 'வலிமை'யான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகளில் தொகுதி பங்கீட்டில் இன்னமுமே இழுப்பறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், வேட்பாளர் நேர்... மேலும் பார்க்க