செய்திகள் :

`அவள் கதை முடிந்தது' - காதலியை கொன்று, தகவலை வருங்கால கணவனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் வைசாலி. சாஹில் என்பவர் வைசாலியை காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் வைசாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது குறித்த தகவல் சாஹிலுக்கு தெரிய வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக வைசாலியை சந்திக்க சாஹில் சென்றார். நாசிக் இந்திரா நகர் கார்டனில் வைசாலி இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சாஹில் சென்றார். சாஹில் அங்கு வருவதை பார்த்தவுடன் வைசாலி தனது வருங்கால கணவனுக்கு போன் செய்து, `சாஹில் வந்துவிட்டான், சீக்கிரம் வாருங்கள்' என்று கூறினார். உடனே வைசாலியின் வருங்கால கணவன் அலுவலகத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு வேகமாக வந்தார்.

வைசாலி தனது போன் இணைப்பை துண்டிக்கவில்லை. வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் நடந்தது. இதனை வைசாலியின் வருங்கால கணவன் தனது போனில் கேட்டுக்கொண்டே வேகமாக வந்து கொண்டிருந்தார்.

30 நிமிடமாக நடந்த இந்த வாக்குவாதத்தில் சாஹில் தன்னிடம் இருந்த கத்தியால் வைசாலியை குத்தினார். சரமாறியாக குத்திக்கொலை செய்த பிறகு வைசாலியிடம் இருந்த போனை பிடுங்கி அவரது வருங்கால கணவனிடம் `வைசாலியை முடித்துவிட்டேன்' என்று சாஹில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி சாஹில் உடல் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி இருந்தது. அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வைசாலி வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது குறித்து சாஹிலுக்கு யார் தகவல் கொடுத்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்; காதலி தற்கொலை

மற்றொரு சம்பவம் : ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது சாப்ட்வேர் எஞ்சினியர் கீர்த்தி, தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கேள்விப்பட்டு மனவேதனையால், மும்பையில் தற்கொலை செய்துகொண்டார்.

கீர்த்தி, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொந்துரு கிராமத்தைச் சேர்ந்த சாய் சுமந்த் என்பவருடன் எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். சாயின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததையடுத்து, அப்பெண் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி இம்முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிய வருகிறது.

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க

கேரள மருத்துவ மாணவர் நிதின்ராஜ் தற்கொலை வழக்கு; 3 மாதங்களுக்குப்பின் HOD கைது - நடந்தது என்ன?

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரகண்டி தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டி.எஸ் மாணவர் நிதின் ராஜ் கடந்த 10.04.2026 அன்று கல்லூரி விடுதி கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ... மேலும் பார்க்க