செய்திகள் :

ஆசியப் போட்டி: 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வென்ற பதக்கம்; சாவன் பர்வால் சாதனை!

post image

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசியப் போட்டிகளில் இந்தியாவின் சாவன் பர்வால் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 42.195 கி.மீ தொலைவை 2 மணி 11 நிமிடம் 37 விநாடிகளில் கடந்து அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் ஆசியப் போட்டி மாரத்தானில் இந்தியா 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதக்கம் வென்றுள்ளது.

1982-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசியப் போட்டிக்குப் பிறகு, ஆண்கள் மாரத்தானில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. அந்த நீண்ட இடைவெளியை சாவன் பர்வால் தற்போது முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

சாவன் பர்வால்
சாவன் பர்வால்

ஜப்பானின் இச்சிடகா யமஷிதா 2:10:49 நேரத்தில் தங்கப் பதக்கமும், சீனாவின் பெய்யோ ஃபெங் 2:12:13 நேரத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ராடா பாங்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாவன் பர்வால். சிறிய கிராமத்திலிருந்து தொடங்கிய இவரது ஓட்டப் பயணம், தற்போது ஆசியப் போட்டி மேடை வரை வந்திருக்கிறது.

சாவன் பர்வாலின் இந்த வெற்றியில் இன்னொரு சுவாரஸ்யமான பின்னணியும் இருக்கிறது. மாரத்தான் அவருடைய ஆரம்ப இலக்கே கிடையாது. பள்ளிப் பருவத்தில் தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய அவர், பின்னர் 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டங்களில் கவனம் செலுத்தினார். 2019-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த பிறகு, தடகளத்தை ஒரு தொழில்முறை பாதையாக எடுத்துக்கொண்டார்.

சாவன் பர்வால்
சாவன் பர்வால்

2026 ஏப்ரலில் ராட்டர்டாம் மாரத்தானில் தனது முதல் போட்டி மாரத்தானிலேயே 2:11:58 நேரத்தில் ஓடி, 1978-ம் ஆண்டு சிவ்நாத் சிங் படைத்த 2:12:00 தேசிய சாதனையை முறியடித்திருந்தார். இப்போது அதைவிட வேகமாக ஓடி, ஆசியப் போட்டியிலும் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.

Asian Game: "பதக்கம் பற்றி நான் சிந்திக்கவில்லை"- வெண்கலம் வென்ற பரணிகா இளங்கோவன்

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், Pole Vault போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் தமிழக தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன்.பரணிகா இளங்கோவன்அவருக... மேலும் பார்க்க

Asian Games: ஷூட்டிங்கில் தங்கம்... தடகளம், டேபிள் டென்னிஸில் பதக்கங்கள்: இந்தியாவின் ஏழாம் நாள்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 7-வது நாளில் இந்தியா ஒரே நாளில் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது. ஷூட்டிங்கில் தங்கம் மற்றும் வெள்ளி, தடகளத்தில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம், டேபிள் டென்னிஸில் ஒரு வெண்கல... மேலும் பார்க்க

Wushu-வில் வெள்ளி; Shooting-ல் வெண்கலம் - Asian Games-ல் தொடரும் இந்தியாவின் பதக்க வேட்டை! | Roundup

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளில் இந்தியாவுக்கு உஷு (Wushu) மற்றும் ஷூட்டிங் (Shooting) போட்டிகளில் பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 60 கிலோ பிரிவில் நௌரீம் ரோஷிபினா தேவி வெள்ளிப் பதக்கம் வென்ற... மேலும் பார்க்க

Asian Games: 10,000 மீட்டர் ரேஸ்; 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்.. சீமா குமாரி சாதனை!

“முயற்சி திருவினையாக்கும்” என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

Asian Games Badmintonல் வெண்கலம் வென்ற மன்னார்குடி வீரர்; "அடுத்த இலக்கு ஒலிம்பிக்"- தந்தை நம்பிக்கை

ஜப்பானில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் விளையாடி த... மேலும் பார்க்க

Asian Games: வெயிட்லிஃப்டிங், சாஃப்ட் டென்னிஸில் பதக்கங்களை குவித்த இந்தியா - ரவுண்ட்அப்!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5-வது நாள் முடிவில், இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் பதிவாகியுள்ளன. வெயிட்லிஃப்டிங் பிரிவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குப் பதக்கம்... மேலும் பார்க்க