செய்திகள் :

ஆசிரியை வெட்டிக் கொலை: ``முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார்" - சாடும் அன்புமணி

post image

தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக பா.ம.க.தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், ``தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு சென்ற காவியா என்ற ஆசிரியை கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஆசிரியை காவியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் காவியாவை காதலித்து வந்ததாகவும், ஆனால், காவியாவுக்கு இன்னொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அஜித்குமார் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.

இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள்.

அன்புமணி
அன்புமணி

ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க தி.மு.க அரசால் முடியவில்லை.

தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு மட்டும் 7 ஆயிரம் படுகொலைகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பதைத் தேடினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஆனால், இது குறித்த கவலைகள் எதுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை.

தம்மைச் சுற்றிலும் உண்மைத் தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் உன்னத ஆட்சி நடைபெறுவதாக வீண்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின், அன்பில் மகேஷ்
ஸ்டாலின், அன்பில் மகேஷ்

அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாய உலகில் இருந்து எதார்த்த உலகிற்கு வர வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தினமும் அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க வேண்டும்.

ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``RSS அமைப்பு தேர்தல் ஆணையத்தையும் கைப்பற்றிவிட்டது'' - ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

நாடாளுமன்ற லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பேசியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, SIR குறித்த விவாதத்தை தொடங்கி வைத்து அந்தப் பணிகளை உட... மேலும் பார்க்க

விதை மசோதா... இந்திய விவசாயிகள் அடமானத்தில்... பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்!

அனைவருக்கும் வணக்கம்...நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், ‘விதை மசோதா- 2025’ தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.‘போலி மற்றும் தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் அபராதம், தவற... மேலும் பார்க்க

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ - தீராத வேதனையில் மீனவ மக்கள்

சென்னை கார்கில் நகர் குடியிருப்புப் பகுதியில் சுனாமியில் வீடுகளை இழந்த 158 குடும்பங்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கடந்தும் வீடுகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உலக வங்கி நகர்புற வாழ்விட மேம்பாட... மேலும் பார்க்க

கொளத்தூர்: "50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்க" பாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்

கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்!தமிழக முதலமைச்சர் மு.க. ஸ... மேலும் பார்க்க

"இது என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு" - தீர்ப்பு குறித்து நடிகர் திலீப் சொன்ன விஷயம்

கேரளாவைச்சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு முதல் இன்றுவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்... மேலும் பார்க்க

`258 பக்கம் ஆவணம், ரூ.1,020 கோடி ஊழல்?' - கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய அமலாக்கத்துறை கடிதம்

திமுகமூத்த அமைச்சர் கே.என்.நேரு1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற... மேலும் பார்க்க