செய்திகள் :

`RSS-க்குத் தடை விதிக்க வேண்டும்' - அமெரிக்க USCIRF அறிக்கை; காங்கிரஸ் விமர்சனமும் அரசின் பதிலும்!

post image

சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' (R&AW) ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

USCIRF

மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார்.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளது.

பேராவூரணி தொகுதியை கூட்டணிக்கு தரமாட்டார் எடப்பாடி! - அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பேராவூரணி. கடமைடை பகுதியான இத்தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த அசோக்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை மீண்டும் அசோக்குமார் போட்... மேலும் பார்க்க

`மயிலாடுதுறையில் மல்லுக்கட்டும் திமுக, அதிமுக மா.செ.க்கள்; தவெக ஆதரவு?' மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'மாவட்ட கள நிலவரம்!மயிலாடுதுறைமயிலாடுதுறை... மேலும் பார்க்க

தொகுதி மாறி மம்தாவுக்கு `குறி'; எதிர்த்து களமிறங்கும் சுவேந்து அதிகாரி - பரபர மே.வங்க தேர்தல் களம்!

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த முறை 4 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.... மேலும் பார்க்க

`ரீல்ஸ் போடும் முதல்வருக்கு வேடநத்தத்தின் கதறல் கேட்டிருக்க வேண்டாமா?' - குமுறும் கிராமத்தினர்!

கடந்த 10 ஆம் தேதி மாணவி மர்ம முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருந்து இன்னமும் அந்த விளாத்திகுளத்தின் வேடநத்தம் கிராமம் மீளவில்லை. சம்பவம் நடந்த ஆறாவது நாளில் நாம் அந்த கிராமத்துக்கு ... மேலும் பார்க்க

நாகர்கோவிலை வட்டமிடும் `பொன்னார்' - குமரி மாவட்டத்தின் 6 தொகுதிகள் கள நிலவரம்! முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?' மாவட்ட கள நிலவரம்!கன்னியாகுமரிகேரளாவைப்... மேலும் பார்க்க

TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' - தவெக அப்டேட்

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார்.Vijayவிஜய்யின் தவெகவும் NDA வும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கியிருப்பத... மேலும் பார்க்க