செய்திகள் :

ஆடியோ விவகாரம்: "ச்சீ! ச்சீ! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!" - பழனிசாமிக்கு ஆ.ராசா பதில்

post image

திமுகவின் தற்போதைய தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விமர்சிப்பதாக ஆடியோ ஒன்று வெளியானது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் சூடாக இருக்கும் அரசியல் களத்தை இந்த ஆடியோ மேலும் பரபரப்பாக்கியது.

இது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆ.ராசா.
 தி.மு.க எம்.பி ஆ.ராசா
தி.மு.க எம்.பி ஆ.ராசா

"நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதையே அடிப்படையாக வைத்து மண்டியிட்டு, யாசித்து, பிச்சையாக பதவி பெற்ற - அரசியலுக்கும், பொதுவாழ்க்கைக்கும் அருகதையற்ற எடப்பாடி பழனிச்சாமி, தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றியும் மாண்புமிகு முதல்வர், கழகத் தலைவர் அவர்களைப் பற்றியும் தேர்தல் நேர அரசியல் ஆதாயத்திற்காக அவதூறாகப் பேசுவது அரசியல் அநாகரிகமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.

மகாகவி பாரதியின்' பாஞ்சாலி சபத' வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன,

"ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க