செய்திகள் :

ஆட்சி அமைக்க மீண்டும் அழைப்பு விடுத்த காடி ஐசன்கோட்; நெதன்யாகு கட்சியின் நிபந்தனைகள் என்னென்ன?

post image

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றுள்ள முன்னாள் ராணுவத் தளபதியும் 'யஷார்' (Yashar) கட்சித் தலைவருமான காடி ஐசன்கோட், இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'லிகுட்' (Likud) கட்சியை மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

சமீபத்திய தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு டிசம்பரில் முடிவடைவதற்குள் நிலவும் அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க ஐசன்கோட் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

ஐசன்கோட் - நெதன்யாகு
ஐசன்கோட் - நெதன்யாகு

நவம்பர் 15 அன்று இரு தரப்புக்கு இடையே நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில், அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு 'தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை' அமைக்கும் நோக்கில் ஐசன்கோட் இப்போது மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், ''ஒற்றுமை அரசாங்கம் அமைந்தால் நெதன்யாகுவே பிரதமராக இருக்க வேண்டும்; 'ஓட்ஸ்மா யெஹுடிட்' கட்சியையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும்; காசா, லெபனான், சிரியா எல்லைகளில் பாதுகாப்பு மண்டலங்களைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும்" என நெதன்யாகுவின் லிகுட் கட்சி பல நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஐசன்கோட்
ஐசன்கோட்

இதற்கிடையே, ஐசன்கோட் தலைமையில் லிகுட் கட்சியையும் இணைத்து ஆட்சி அமைக்க 'பி'யாச்சத் கட்சித் தலைவர் நஃப்தாலி பென்னட் ஆதரவு தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க ஐசன்கோட் அணியில் உள்ள முக்கியத் தலைவர்களே தயக்கம் காட்டுகிறார்கள்.

இதனால், 'யுனைடெட் தோரா ஜூடைசம்' கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை பெரும்பான்மைக்கான பெரிய கூட்டணி அமையாவிட்டால், 'சிறுபான்மை அரசாங்கம்' அமைப்பது குறித்தும் ஐசன்கோட் ஆலோசித்து வருவதால், இஸ்ரேல் அரசியலில் அடுத்த சில வாரங்கள் பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”தவெக ஆட்சி நீடிக்காது என தன் ஆசையை ஸ்டாலின் வெளிப்படுத்தி வருகிறார்”- பெ.சண்முகம்!

தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 23 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரி மீட்புக் குழு சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என... மேலும் பார்க்க

டாக்டராக மாறிய செக்யூரிட்டி; ஓ.பி சீட் வழங்கும் தூய்மை பணியாளர் - கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவலம்

"அரசு மருத்துவமனை என்பது ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் கோயில்" என்பார்கள். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், "இங்கு சிகிச்சைக்குப் போவத... மேலும் பார்க்க

’எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செங்கோட்டையன் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் காலத்தை எதிர்த்து போரிட முடியும். முன்னாள் ஞானத்தை எதிர்த்து போரிட முடியும். ஆனால... மேலும் பார்க்க

”காவிரி நீரை பெறுவதில் தவெக அரசு மெத்தனம்; முதல்வர் விஜய் வாய்திறப்பதில்லை”- எடப்பாடி பழனிசாமி!

தஞ்சாவூரில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் எடப்பாடி பானிசாமி செய்தியாளர்களிடம் கூறிய... மேலும் பார்க்க

இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவலம்!

கேரள மாநிலத்தின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்தான இடுக்கி மாவட்டம் இடமலக்குடி பஞ்சாயத்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி முற்றிலும் முடங்கியுள்ளது. ஒருபுறம் 6 மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளமில்லை; மற... மேலும் பார்க்க