செய்திகள் :

"ஆட்சி அமைத்த பின் 'பாஜக' என்ற சொல்லைக்கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்வர்" - உதயநிதி காட்டம்

post image

மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசைக் கண்டித்தும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட்.3) நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதல்வர்தான் காரணம். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் விஜய் இதைப் பற்றி வாய் திறந்து பேசவில்லை.

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஆட்சி அமைத்து 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக் கூட உச்சரிக்காத தைரியசாலி நமது முதல்வர். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸை எதிர்த்துப் பேச முதல்வருக்குத் திராணி இல்லை.

லாட்டரி விற்ற அமைச்சர், பிளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், போதைப்பொருளுடன் சுற்றும் அமைச்சர் தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஜோக்கர்களாக உள்ளனர்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

விவசாயிகள் கண்ணீரைப் பற்றி கவலைப்படாமல் அமைச்சர்கள் படம் பார்த்து கண்ணீர் விடுகின்றனர். ஏதாவது ஒரு பிரச்னை வந்தால் அதை எப்படி திசைதிருப்புவது என்ற வேலையில் ஈடுபடுகின்றனர்.

தினமும் மாலை 4 மணி ஆனால் போதும் ஏதாவது ஒரு ரீல்ஸ் போட்டு திசைதிருப்புகிறார் முதல்வர்" என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க